பக்கம்:ஆப்பிள் பசி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருக்கிறது. தெருக்களில் கார்கள், சாரட்டுகள் ஏராளம். நிறைய-வெள்ளைக்காரர்கள் இருக்கிருர்கள். 'லேக் ஏரியா' பக்கம் நான் தங்கியிருக்கிறேன். பெரிய வீடு எடுத்துக் கொடுத் திருக்கிரு.ர்கள். வேளா வேளைக்குச் சாப்பாடு. ஷூட்டிங் இன்னும் இரண்டு தினங்களில் ஆரம்பமாகிறது. ஸ்டுடியோ வில் எல்லாம் வெள்ளைக்காரர்களாம். "ஆஷஸூன் போஷஅன்' என்று வங்காளிகள் எனக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிருர் கள் இங்கே. -

ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தேன். வாழ்க்கையில் என் அம்மாவுக்கு அடுத்தபடி உங்கள் அப்பா வைத்தான் நினைக்கிறேன். எனக்கு அவ்வளவு ஒத்தாசை செய் திருக்கிரு.ர்.

இன்று கல்கத்தாவில் பயாஸ்கோப்பில் நடிக்கும் அளவுக்கு நான் வளர்ந்திருப்பது உங்கள் அப்பாவால்தான்.

அப்புறம் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாமா! ஆத்மா வுக்கு எது ரொம்ப அருகில் இருக்கிறது என்று உபன்யாசகர் கள் கேட்பார்கள். பகவான் என்று பதில் சொல்லுங்கள் என்பார்கள். நான் சகுந்தலா என்று சொல்லுவேன். நம் இருவரும் அவ்வளவு நெருக்கமாகி இருக்கிருேம்.

இங்கே கல்கத்தாவந்தபிறகு என்ன நினைக்கிறேன் தெரியுமா? நீங்கள் இங்கே வந்தால் இங்குள்ள புதுமைகளை எப்படி எப்படிப் பார்ப்பீர்கள், எப்படி எப்படி ரசிப்பீர்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். உங்கள் ரசிப்பையே நான் அனு பவிக்க விரும்புகிறேன். -

இப்படி நினைப்பதற்கு ஆதாரம் மல்லிகை ஒடைப் பக்கம் அன்று நாம் நடந்து சென்றபோது ஏற்பட்ட நெருக்கம்தான்.

இங்கே வேலை எல்லாம் முடிந்ததும் உடனே ஊருக்குத் திரும்பி வந்துவிடுவேன். -

ஒருவேளை, நீங்கள் கல்கத்தா வர சந்தர்ப்பம் கிடைத்தால், அதை எண்ணிப் பார்க்கும்போதே ம்னம் சிலிர்க்கிறது.

- தங்கள் அன்பார்ந்த சாமண்ணு. அந்தக் கடிதத்தை சகுந்தலா ஆறு தடவை படித்துவிட்டாள். முதலில் படித்தபோது ஒரு அசுவாரசியமான புன்னகை & Did L-L-3s.

சாமண்ணு கையெழுத்து கோணல்மாணலாக இருந்தது. அதிகம் படித்திருக்க மாட்டான்.ஆனலும் இவ்வளவு அழகான வார்த்தைகளை எப்படி எழுதியிருக்கிருன்? உண்மையிலேயே என்னிடம் ஏற்பட்டுள்ள அன்பின் சக்திதான் அழகான வார்த்தைகளாக வந்திருக்கின்றன ! * அப்புறம் இரண்டாம் முறை. மூன்ரும் முறை என்று படித்த போது மனம் அங்கங்கு ஆதங்கமுடன் நின்று' முறுவல்

  • 5:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/149&oldid=1028098" இலிருந்து மீள்விக்கப்பட்டது