பக்கம்:ஆப்பிள் பசி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிந்தது.பின்னும் வாசித்தபோது உள் உணர்வில்மென்மை யாக ஒரு புதுமை உணர்ச்சி கலந்ததுபோல் இருந்தது. மேனி எங்கும் ஒரு அரும்பு நடுக்கம் பரவியது. -

பார்வை அடிக்கடி கடிதத்தை விட்டு வெளியேறி சூன்யத்தை அன்போடு பார்த்தது. -

ஒரு துஷ்யந்த கம்பீரத்தில் சாமண்ணுவின் முகம் ஒரு வசீகர வடிவில் தோன்றி மறைந்தது.

'கடிதம் எழுதிவிட்டார் பார்த்தியா?' மெதுவான குரலில் அவள் உள் மனம் குதூகலித்தது.

கல்கத்தா போய் பத்து நாட்களுக்குப் பிறகுதான் ஷஅட்டிங் தொடங்கியது.

தளவாடங்களையும் மனிதர்களையும் ஒரு அரும்பாடுபட்டுத் தயாரிப்பாளர்கள் குறித்த இடத்தில் கொண்டு குவிப்பதற்கு அத்தனை நாட்களாகிவிட்டன.

காலையில் எட்டு மணிக்கே சாமண்ணுவை ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்ருர்கள். -

கேட்டுக்குள் நுழைந்ததும், அருமையான பாதைகள், நிழல் தரும் வயதான மரங்கள். -

மேக்-அப் அறையில் எத்தனை கண்ணுடிகள்! எத்தனை வர்ண புட்டிகள்! -

மேக்-அப்காரர் ஒரு வங்காளிக்காரர். ஆங்கிலம் கலந்த வங்காளியில் பேசினர். அவர் இரண்டு தரம் முகத்தில் பூசியதுமே, அதில் ஜொலிப்பு வந்துவிட்டது.

அரிதாரம் பூசினல் விறுவிறு என்று இருக்குமே, அது மாதிரி இ அரைமணி நேரத்தில் தலையில் டோபா வைத்து, கிரீடம் வைத்து, ஆடையணிகள் பூட்டி சாமண்ணுவை துஷ்யந்தளுக்கி விட்டார்கள். -

சாம்.ண்ணு பெரிய நிலைக் கண்ணுடியில் முழு உருவத்தைப் பார்த்ததும் கண் துள்ளியது. ஒரு அடி-பின்னல் நகர்ந்து, 'உண்மைதான' என்று பார்த்தான். உண்மைதான்!

'ன்னக்கு இவ்வளவு முகவெட்டா? இப்படி ஒரு மன்மதத் தோற்றமா? அம்மா! நீ இருந்து இதைப் பாராமல் போய் ட்டாயே' என்று உள் மனம் சிலும்பியது. -

'துஷ்யந்தன் ரெடியா?' என்று ஒரு குரல் கேட்க, ஒருவர் உள்ளே ஓடிவந்து, "வாங்க, வாங்க' என்று அவனே உபசரித்து அழைத்துச் சென்ருர்,

அந்த கேட்டில்துழைந்ததும் சாமண்ணுவின் கண்கள் பரபரத் தன. அந்தப் படப்பிடிப்பு வகையருக்களை அப்போதுதான் வாழ்வில் முதல்முறையாகப் பார்க்கிருன் கீழே தரை எங்கும் பாம்புகள் போல ரப்பர் ஒயர்கள் ஓடின. ஆச்சர்யமாக எதிரே

is 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/150&oldid=1028100" இலிருந்து மீள்விக்கப்பட்டது