பக்கம்:ஆப்பிள் பசி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு அரண்யக் காட்சியை அட்டையிலுைம் துணிகளாலும் உண்டாக்கியிருந்தார்கள். -

கொளுத்துகிற பகல் போல் அங்கே வெளிச்சம் சாடியிருந் திது.

சாமண்ணுவை அங்கேநிறுத்திவைத்ததும்,ஒருதண்டவாளத் தில் காமிரா மிஷின் நகர்ந்து வந்தது. இரண்டு பேர் அந்தக் காமிரா வண்டியைத் தள்ளி வந்தார்கள்.

நெடிதான ஒரு வெள்ளைக்காரர் சாமண்ணு அருகில் வந்து, "யூ ஆர் த ரா?' என்று குழைவாகக் கேட்டார்.

அந்த வெள்ளைக்காரர்தான் டைரக்டர் என்று தயாரிப்பாளர் சேட் சாமண்ணுவிடம் தெரிவித்தார்.

அவனிடம் குழைந்து பேசிய அந்த டைரக்டர் அடுத்தகணம் மற்ற சிப்பந்திகளிடம் பேசும்போது மிகவும் கெடுபிடியாக இருந்தார். - ஸவுண்ட் இஞ்சினியர் ஒடி வந்து, நீண்ட கழி போன்ற மைக் பகுதியை சாமண்ணுவின் தலைக்குமேலே நிறுத்தி வைத்தார். -

பக்கவாட்டத்தில் மிருதங்க, வயலின், ஹார்மோனியப் பாடகர்கள் தயாராக இருந்தார்கள்.

எல்லாம் தயாரான நிலையில் டைரக்டர், 'ரெடி' என்று கூறியதும், -

சேட், ஒரு தேங்காய் மீது கற்பூரத்தைக் கொளுத்தி வந்து திருஷ்டி சுத்தினர்.

அவசரமாக டைரக்டர், வசனத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொல்லிக் காதால் கேட்டுக் கொண்டார்.

"ரைட்! இந்த ஷாட்லே ஆரம்பிக்கலாம். ஹீரோயினை உடனே அழைச்சுட்டு வா!' என்ருர் டைரக்டர்.

இரண்டே நிமிடத்தில் சாமண்ணு அருகில் சகுந்தலை வேடம் தரித்த ஒரு பெண் மின்னல் போல் வந்து நின்ருள்.

"இவங்கதான் சகுந்தலையா நடிக்கிருங்க! வங்காள நாடகத் திலே பிரபலமானவங்க! சுபத்ரா முகர்ஜின்னு பேரு' என்று சேட் அறிமுகப்படுத்த சாமண்ணு அவளைப் பார்த்தான்.

அழகான மீன் விழிகள் கொஞ்சிக் கொண்டு பார்க்க, முகம் பட்டுச் சிவப்பில் மினுமினுக்க,

சுபத்ராவின் அழகில் பிரமித்து மயங்கி நின்ருன் அவன்.

I56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/151&oldid=1028102" இலிருந்து மீள்விக்கப்பட்டது