பக்கம்:ஆப்பிள் பசி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

அந்த வட இந்திய அழ்கியின் கடல் போன்ற விழிகளும்,

நிறமும், வித்தியாச ”அமைப்பும் சாமண்ணுவை பிரமிக்க வைத்தன. -

'இப்படி எல்லாம் அழகிகள் இருக்கிரு.ர்களா உலகில்?’

'நொமஷ்கார்' என்ருள்.

முறுவலை விரித்தபோது அரும்பிய பல் வரிசை முத்துக் களாய்ப் பளிச்சிட்டன. இளம் குருத்து போன்ற வயிற்றின் சருமம் அவனை சொர்க்கத்துக்கு இழுத்தது. இடுப்பில் இறுக்கி யிருந்த ஸாரியும், அதை அடுத்த விஸ்தீரணமான இடுப்புப் பகுதியும் போதையை ஏற்படுத்தின.

முதல் ஒத்திகை நடந்தது. சைலன்ஸ்' என்ற இரைச்சலுக் குப் பின் நிசப்தம் நிலவ, டைரக்டர் ஆக்ஷன்” என்ருர்.

சுபத்ரா முகர்ஜி கையில் குடத்துடன் நடந்து வந்தாள். ஆசிரமப் பெண் போன்ற அசல் சாயலில் மென்மையாகக் குலுங்கி, ஒரு பூங்கொடி அசைந்து வருவது போல் வந்தாள்.

ஸெட்டில் நிற்பதுபோல் தெரியவில்லை. ஒரு ஆசிரமத்துக்கு அருகே அசல் சகுந்தலையைப் பார்த்து நிற்பதுபோல் தோன்றி யது. அந்தக் கணத்தில் ஒரு பழங்காலத்துள் போன மாதிரி இருந்தது, -

ஆ!

அந்த முள் குத்திய முகபாவம் பிரமாதமாக வந்தது. தெற்றி யில் படிந்த சுருக்கமும், முகித்தில் ஒடிய வலியும் அப்படியே தத்ரூபம், முகத்தில் தோன்றிய அந்த பாவத்தில் அவள் வலி அவனுக்கே ஏற்பட்டது போன்ற பிரமை தோன்றியது.

芷5?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/152&oldid=1028105" இலிருந்து மீள்விக்கப்பட்டது