பக்கம்:ஆப்பிள் பசி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இலுப்புச் சட்டியும், வாளியும் வாங்க வந்திருக்கேன்!' என்று கூறிக் கலகலவென்று சிரித்தாள்.

'அதற்கு இவ்வளவு பணத்தைச் செலவழித்துக்கொண்டா? என்ருன்.

சகுந்தலா பேசவில்லை. ஸெட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த சாமண்ணு, வந்திருந்த உதவியாளரிடமிருந்து அடுத்த உரையாடலைக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.

இரண்டு மூன்று முறை நெட்டுருச் செய்துவிட்டு, அவன் சகுந்தலாவைப் பார்த்தபோது தலைகுனிந்து நின்றிருந்த அவள் முகத்தில் நிழலிட்டிருந்தது.

'அப்புறம் எத்தனை நாள் இருப்பீங்க?' என்ருன் ஒரு பொதுக் கேள்வியாக.

'இரண்டு நான் இருப்போம்' என்ருள். 'முடிஞ்சா வந்து பார்க்கிறேன். இங்கே ரொம்ப பிஸி! நேரம் கிடைக்கிறதில்லை. இன்னுெரு படம் உடனே இங்கே 'புக் ஆகும் போல இருக்கு' என்ருன்.

காரியதரிசியை அழைத்தான். 'இவர்தான் என் ஸெக்ரிடரி என்று அறிமுகப்படுத்தின்ை.

"இவங்க அட்ரஸ் வாங்கி வச்சுக்க, இவங்களுக்கு நம்ப ஷல்ட்டிங் தேதி, ஸெட், ஃப்ளோர் எல்லாம் எழுதிக் கொடு' என்று அவனிடம் கூறிவிட்டு எழுந்து, அடுத்த காட்சிக்காக ஸெட்டுக்குள் சென்ரு:ன்.

夏82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/156&oldid=1028114" இலிருந்து மீள்விக்கப்பட்டது