பக்கம்:ஆப்பிள் பசி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலாவின் கண்கள்.சாமண்ணு அருகில் இருந்த இரண் டாவது நபரையும் கவனிக்கத் தவறவில்லை. அது சுபத்ரா முகர்ஜி என்று தெரிந்ததும் மனத்தில் சுருக்கென்று முள் தைத்தது. குனிந்து கொண்டே நடந்தாள்.

காலையில் டாக்டர் ராமமூர்த்தி தங்கியிருந்த பார்க் ஹோட்டலுக்கு சேட் வந்து சேர்ந்தார்.

'நாளை ராத்திரி ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நீங்க அவசியம் வரணும்' என்ருர்.

ராமமூர்த்தி, 'எதுக்கு இதெல்லாம்? வேணும்!' என்று மறுக்க, சேட் வற்புறுத்த, ராமமூர்த்தி கடைசியில் ஒத்துக் கொண்டார்.

நகர்ப்புறத்தில் 'டோவர் காஸில்' என்ற பெரிய பங்களா வில் அந்த விருந்து நடந்தது.

தோட்டம் சூழ்ந்த மாளிகை, அன்றிரவு அதில் மின்சாரப் பூக்களாகச் சொரிந்தன.

காஸ் விளக்குகள் மின்ன , தோட்டத்துப் புல் வெளியில் துணி போர்த்திய மேஜைகளில் விருந்து. -

இரு வரிசைகளில் பிரமுகர்கள் உட்கார்ந்து அறிமுகம் எல்லாம் ஆகிவிட்ட நிலையில் சற்று உரக்கப் பேசிக் கொண் டிருந்தார்கள். -

சாமண்ணுவுக்குப் பக்கத்தில் டாக்டர் ராமமூர்த்தி டைகட்டி அசல் ஐரோப்பிய நாகரிகத்தில் உட்கார்ந்திருந்தார்.

அவரை அடுத்து சகுந்தலா, அழகான மெஜன்டா நிறத் துகிலில் அப்சரஸ் போல மின்னிக் கொண்டிருந்தாள்.

டாக்டர் ராமமூர்த்தி, 'என்ன சாமண்ணு, பேசாமல் இருக்கே?' என்று கேட்டதும், 'அன்னிக்குப் பார்த்தீங்களே ஷஅட்டிங், எப்படி இருந்தது? அப்பாகிட்டே சொல்லுங்க' என்ருன் சகுந்தலாவைப் பார்த்து ஒப்புக்காக.

'பிரமாதம் அந்த லெட் அப்படியே தத்ரூபமா காடு போல இருந்தது.'

சகுந்தலா ஒரமாகக் கண்ணை ஒதுக்கி அவனைப் பார்க்க, அவன் புன்னகை மாருமல் அவளைப் பார்ப்பது இன்னும் கொஞ்சம் ஆச்சரியத்தை விளைவித்தது.

சுபத்ரா முகர்ஜி ஒரு nட் தள்ளி அமர்ந்திருந்தாள். பாஷை தெரியாததால் இடைஇடையே செயற்கையாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள். - - -

“டாக்டர் ஸார், உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல ணும். நீங்க மட்டும் சாமண்ணுவை எங்களுக்கு அனுப்பி வைக்கலேன்ன இவ்வளவு பெரிய நடிகர் எங்களுக்கு வேறே. யார் கிடைச்சிருக்கப் போருங்க? அவர் நடிப்பைக் கண்டு 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/158&oldid=1028120" இலிருந்து மீள்விக்கப்பட்டது