பக்கம்:ஆப்பிள் பசி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் மலைச்சுப் போருங்க' என்று பரவசமாகக் கூறி ஞர் சேட். . . 'ஸெட்டுலே வந்து நின்னர்ளு எல்லார் பார்வையும் அவர் பேரிலேதான்' என்ருர் துணை டைரக்டர். -

சாமண்ணு எல்லோரையும் பார்த்துவிட்டு.சகுந்தலா பக்கம் திரும்பினன். -

'சாமண்ணு பற்றி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ஊரிலே போய் சொல்றேன்' என்ருர் ராமமூர்த்தி.

"நிச்சயம் சொல்லனும் அதுக்கு முன்னடி நீங்க ஒருமுறை ஸெட்டுக்கு வரணும். ராஜ தர்பார்போட்டிருக்கோம். அதை அவசியம் வந்து பார்க்கணும். காலையிலே கார் அனுப்ப றேன்' என்ருர் சேட்.

சாமண்ணு அன்று படுக்கைக்குச் செல்லும்போது மணி பதினென்று. உறக்கம் வரவில்லை. அந்த பாண்டு இசையும், சிரிப்பும், பாட்டும், பேச்சும், பார்ட்டியின் அத்தனை ஜொலிப்பு களுமே அவன் உணர்வில் ஊடுருவியிருந்தன.

இத்தனை களிப்புகளுக்கும் மூல புருஷன் தான்தான் என்று எண்ணும்போது சாமண்ணுவின் மனம் சிறகடித்தது.

சில மாதங்களுக்குமுன் தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று எண்ணிப் பார்த்தாள். துவைத்த சட்டை மீது அழுக்குத் துண்டைப் போர்த்திக் கொண்டு தெருக்களில் அலைந்தது, மிளகாய்க் காரத்துடன் ஒட்டலில் சாப்பிட்டது. எல்லாரும் 'டா' போட்டுப் பேசியது, குழைந்து பதில் சொன்னது, ராத்திரி வெறும் கட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துறங்கி ԱԱ351....

'அந்த சாமண்ணுவா நான்? இப்போது எப்படி மாறிவிட் டேன்! என்னை வாட்டிய வறுமையும் அதை ஒட்டிய துன்பங்

களும் இப்போது எங்கே போயின?

இன்று இந்த கல்கத்தாவின் பிரபுக்களும் பிரமுகர்களும் என் நட்பைத் தேடி வருகிருர்கள்! என்ளுேடு சிநேகமாயிருப் பதை ஒரு சமூக அந்தஸ்தாகக் கருதுகிருர்கள். .

அவனது மற்ருெரு மனம் அப்போது குறுக்கிட்டுப்பேசியது. 'சாமு! இதெல்லாம் உனக்கு என்ன சும்மா கிடைக்கின்றனவா! உன்னிடம் திறமை இருக்கிறது. வித்தை இருக்கிறது. அதை ரசித்துத்தான் உன்னிடம் எல்லோரும் பணத்தைக் கொண்டு. வந்து கொட்டுகிரு.ர்கள்!

இதோ இந்த டாக்டர் ராமமூர்த்தியே உனக்கு எவ்வளவு எட்டாத உயரத்தில் தெரிந்தார்!

இந்த சகுந்தலாவே... ஆமாம், இவளே எத்தகைய தேவ லோக அந்தஸ்தில் தெரிந்தாள்! .

ஸ்ெட்டில் ராஜ தர்பார் ஜொலித்துக் கொண்டிருந்தது உள்ளே நுழைந்த ராமமூர்த்தி பிரமிப்பில் மூழ்கினர்

1.65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/159&oldid=1028124" இலிருந்து மீள்விக்கப்பட்டது