பக்கம்:ஆப்பிள் பசி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறேன்' என்றெல்லாம் சொன்னீர்கள்.'

“என்ன?' ச்ாமண்ணுவின் முகத்தில் ஒரு பழியை ஏற்க மறுக்கும் துடிப்பு தெறித்து வந்தது.

'நான் உன்னை நேசித்தேன? ஏதாவது கனவு கண்டாயா, பெண்ணே ?’’ -

'இல்லை. என் மீது பிரேமை வைத்தீர்கள். என்னுடன் உல் லாசமாகத் திரிந்தீர்கள். சல்லாபம் செய்தீர்கள்.'

'என்ன!' என்று சாமண்ணு கேட்டபோது முகத்தில் ஒரு கோபக் கீற்று ஜ்வாலையிடுவது தெரிந்தது.

'ஆ அற்புதம்' என்கிற பாவனையில் பலர் கையைத் துக்கி ஞர்கள். ராமமூர்த்தி சகுந்தலா கையை அழுத்தினர்.

'பெண்ணே உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா? பார்! என்னைச் சரியாகப் பார்! கவனித்துப் பார்! iணுக என் மீது பழி போடாதே!'

டக்கென்று ஆத்திர மிகுதியில் சாமண்ணு எழுந்தபோது குலுங்கிய அவனது அணிமணிகளில் கூடப் பதற்றம் தெரிந்தது. 'இல்லை மகாராஜா! நிஜம்! நிஜம்' ."יריי 'நிஜம் என்பதற்கு சாட்சி?' . 'என் தோழி அனுசூயா! இதோ இருக்கிருள்.' 'மன்னர் மன்ன! தாங்கள் என்னையும் மறந்துவிட்டீர்களா! என்னைத்துது அனுப்பித்தானே சகுந்தலையைத் தங்கள் பக்கம் வரவழைத்தீர்கள்!' .

'பொய், பொய். எல்லாம் பொய்! iளுக ஒரு மனனன் மீது பழி சுமத்துகிறீர்கள். நான் நம்பமாட்டேன்.'

'மகாராஜா! தாங்கள் என்னை காந்தர்வ விவாகம் செய்து கொண்டபோது அடியாளுக்குப் போட்டமோதிரம் என்னிடம் உள்ளது!’

நர்ன் மோதிரம் போட்டேன? ஹாஹா! எங்கே அதைக் காட்டுங்கள். - -

சுபத்ரா, தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றப் பார்க் கிருள். விரலில் மோதிரம் இல்லை!

"ஐயோ! அனுசூயா மோதிரம் எங்கே? எங்கே அந்த மோதிரம்?' - * .

'ஹர்அம்! கொடுத்திருந்தால்தானே இருக்கும்!' 'ஆஹ்ஹாஹ்ஹா...' துஷ்யந்தின் சிரிப்பு ஏளனத்தோடு மிதந்தது.

சகுந்தலை மூர்ச்சையாகிக் கீழே விழுகிருள். சுற்றி நின்றவர்கள் வெறும் நடிப்பென்று எண்ணினர். மூர்ச்சை கலைந்து இதோ எழுந்திருப்பாள் என்று எதிர்பார்த்த னர். வெகு நேரம்ாகியும் சகுந்தலையாக நடித்த சுபத்ராமுகர்ஜி எழுத்திருக்கவில்லை. திடுக்கிட்ட டைர்க்டர் அவளே நீேக்கி, விரைந்தார். . . . . . ... &

167

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/161&oldid=1028130" இலிருந்து மீள்விக்கப்பட்டது