பக்கம்:ஆப்பிள் பசி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும் சுபத்ராவிடம் ரொம்ப நாளாகப் பழக்கம் என்றும் சொன்னர்கள்.

இரவில் சுபத்ராவைப் பற்றிய இன்ப எண்ணங்கள் குமிழ் குமிழாகச் சுழித்து வந்தபோது அங்கங்கே அந்த இளைஞனின் நினைவு ஒரு முள் போலத் தோன்றி அந்தக் கண்ணுடிக் குமிழ் களைக் குத்திவிட்டுச் சென்றது.

இவர்களுக்குள் அப்படி என்ன உறவாக இருக்க முடியும்? தூரத்து உறவுக்காரனே? காதலன, கல்லூரித் தோழன? யார் இவன்? -

இரண்டாம்நாள் சாமண்ணு ஆஸ்பத்திரிக்குப்போனபோது, சேட் அவனைத் தனியாக அழைத்துப் போய், சாமண்ணுT! சுபத்ரா எழுந்தாச்சு. இப்போ உடம்பு குணமாயிட்டுது! ரெண்டு நாளில் 'ஆக்ட்' பண்ணலாம்னு டாக்டர் சொல்லிட் டார். ஆன தர்பார் சீனை இப்போ எடுக்க வேணும். வேறே சீன் எடுங்கன்னு சொல்லியிருக்கார்.'

'ஏளும்?' என்ருன் சாமண்ணு. - 'அந்த சீன்லே உங்க நடிப்புதான் அவளை இந்த அளவுக்குப் பாதிச்சுட்டுதாம். அதேைல அதைத் தள்ளிப் போடச் சொல்லி யிருக்கார்.'

'அப்படியா?” "ஆமாம். ஆஸ்பத்திரியில்கூட சுபத்ரா புலம்பிக்கிட்டே இருந்தாங்க. 'நான் நிஜ சகுந்தலை! நான் நிஜ சகுந்தலே'ன்னு. டாக்டர் இதை ஒரு அபூர்வ கேஸ் என்கிருர். அதாவது தான் நடிக்கிற பாத்திரமாகவே மாறி, தன்னை சகுந்தலையாகவே அந்த அம்மா நினைச்சுக்கருங்களாம். அந்த நினைப்பில்தான் அன்னிக்கு மூர்ச்சை ஆயிட்டாங்களாம்!'

சேட் சொன்னதும் சாமண்ணுவுக்குப் பளிச்சென்று ஒர் எண்ணம் உதித்தது. ஒருவேளை தன்னை அவள் கணவன கவே தீர்மானித்துக் கொண்டு, அந்தப் பிரமையில் துஷ்யந்தன் நிராகரிப்பதை உண்மையாக எடுத்துக் கொண்டு விட்டாளோ?

சாமண்ணு மனதுக்குள் பொங்கிய மகிழ்ச்சியை வெளிக் காண்பிக்கவில்லை. அன்று வார்டுக்குள் நுழையும்போது சுபத்ராவே அவன் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண் டிருப்பது தெரிந்தது. -

மெல்லிய வெளிச்சத்தோடு அறை நிதானமாக இருந்தது.

சாமண்ணுவைக் கண்டதும்,'வாங்க சாமண்ணு' என்ருள் ஆர்வத்தோடு.

தன் அருகில் உட்கார்ந்திருந்த கோஷை அலட்சியமாகப் பார்த்து, "சரி, அப்புறம் பார்க்கலாம் கோஷ்' என்ருள்.

சாமண்ணு வந்ததும் அவள் மாறுதலாக நடந்துகொள்வதை கோஷ் புரிந்து கொண்டபோதிலும் எழுந்திருக்காமல் தயங்கி ன்ை.

169

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/163&oldid=1028136" இலிருந்து மீள்விக்கப்பட்டது