பக்கம்:ஆப்பிள் பசி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'எனக்கு ஒய்வு வேணும். நல்லாத் தூங்க விரும்பறேன். ஒரு ரெண்டு நாள் யாரும் வராம இருந்தா நல்லது' என்று ஆங்கிலத்தில் கூறினள் அவள். -

கோஷ் அப்போதும் அமைதியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட சுபத்ரா, -

'கோஷ்! உங்களைத்தான் சொல்கிறேன்' என்று சற்று அழுத்தமாகக் கூறிள்ை.

கோஷ் குமைவது தெரிந்தது. - - இந்தச் சமயத்தில் சாமண்ணுவுக்கு அங்கிருப்பது உசித மாகப் படவில்லை. அவன் திரும்பி வெளியே நடந்தான். "சாமு! நீங்க எங்கே போlங்க? நீங்க இருங்க' என்ருள் சுபத்ரா. வெறும் குரலாக இல்லை அது! அவளுடைய ஆன்மா வின் அந்தரங்க தொனியாக ஒலித்தது.

'இல்லை சுபத்ரா! நான் அப்புறம் வரேன்...' என்று கூறிக் கொண்டே சாமண்ணு அந்த இடத்தைவிட்டு அகலப் பார்த்

厅命芹。 த சாமு!' என்று தாபத்துடன் மேலும் தீர்க்கமாக அழைத்தது அவள் குரல்.

க்ோஷ் அவர்கள் இருவரையும் கடுமையாகப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து வெளியேறினன்.

சுபத்ரா படுக்கையிலிருந்து நிமிர்ந்து உட்கார்ந்து சாமண்ணு வின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பிடியின் அழுத்தத்தில் ஆயிரம் அந்தரங்கங்கள் இருந்தன. 'சாமு.... சாமு. நீங்க வந்தால்தான் எனக்கு மனசுக்கு இதமாக இருக்கு' என்று குழந்தைபோல் சொல்ல, சாமண்ணு எதுவும் பேசாமல் அவளைக் கனிவோடு பார்த்தான்.

இருவரும் அந்தப் பரவச நிலையிலே சிறிது நேரம் மெய்ம் மறந்து இருந்தார்கள். -

ஏதோ சப்தம் கேட்டுக் கைகளை விடுவித்துக் கொண்ட சாமண்ணு திரும்பியபோது ராமமூர்த்தியும், சகுந்தலாவும் உள்ளே வந்து கொண்டிருந்தனர். - -

'வாங்க! வாங்க!' என்ருன் சாமண்ணு. "வாங்க டாக்டர்! அன்னிக்கு நீங்கதான் எனக்கு முதலுதவி செஞ்சீங்களாம். ரொம்ப நன்றி' என்ருள் சுபத்ரர்.

சகுந்தலா எந்த பாதிப்பும் இல்லாததுபோல் சலனமற்று நின்ருள். - -

"ஊருக்குப் போகணும். வந்து நாளாச்சு' என்று பேச்சை ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

“டாக்டர் ஸார் அதுக்குள்ள என்ன அவசரம்? மெதுவாப் போகலாம் இருங்க. ஊரைச் சுற்றிப் பார்த்தீர்களா? பேலூர் மடம், காளி கோவில் எல்லாம் பார்க்க வேண்டாமா? நான் வேணும்னு நாளைக்குக் கார் அனுப்பறேனே!' என்ருன் சாமண்ணு.

172

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/165&oldid=1028141" இலிருந்து மீள்விக்கப்பட்டது