பக்கம்:ஆப்பிள் பசி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீங்கதான் எனக்குத் துணை' என்று அவள் கூறியவார்த்தை செவிகளில் தேனய் ஒலித்தது.

"என்னை விட்டுப் போயிடாதீங்க, சாமண்ணு.' ஒருநிலை கொள்ளா ஆனந்தம் அவனது சரீரத்தை ஆட் கொண்டு சுழற்றுவது போலிருந்தது.

சுபத்ராவா! அந்தக் கல்கத்தா ராணியா? வங்கத்துக் கனவு சுந்தரியா? அவளா என்னை நேசிக்கிருள்? அவளா இப்படி யெல்லாம் பேசுகிருள்? நினைக்க முடியவில்லையே!

ஏன்? என்னிடம் திறமை இருக்கிறது. தகுதி இருக்கிறது. அந்தஸ்து இருக்கிறது. அதனுல்தான் சுபத்ரா என்னிடம் இப்படி மயங்கிக் கிடக்கிருள்! எப்படிப்பட்ட பெரியவங்க, மீந்தாருங்க சமஸ்தான ராஜாக்கள் எல்லாம் அவள் காலடி ல் விழத் தயாராயிருக்கிறபோது அவள் என் காலைப் பிடிச்சு கெஞ்சத் தயாராயிருக்கிருள்! - -

காலையில் எழுந்ததும் ராமமூர்த்திக்குக் கார் அனுப்ப வேண்டிய நினைவு வந்தது. -

சகுந்தலாவின் சலனமற்ற முகத்தை ஆராய்ச்சியோடு எண்ணிப் பார்த்தான். - -

ஹஅம்! இந்தப் பேரழகி சுபத்ராவின் முன்னல் அவள் ஒன்றுமே இல்லை. அவனுக்கு உயர் ரக ஆப்பிளே கிடைத்தா யிற்று. இனிமேல் சொந்த ஊரில் விளைந்த கிச்சிலிப்பழம் இனிக்குமா?

மணி அடித்து டிர்ைவரை அழைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/167&oldid=1028145" இலிருந்து மீள்விக்கப்பட்டது