பக்கம்:ஆப்பிள் பசி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வி க்டோரியா மெமோரியல் பார்த்துவிட்டு, அப்படியே எதிரில் மியூசியத்தையும் பார்த்தானதும், "அப்பா வீட்டுக்குப் போகலாமா?' என்ருள் சகுந்தலா.

'ஏன் இதுக்குள்ளவா களைச்சுட்டே!” என்று கேட்டார் ராமமூர்த்தி. >

'இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை" என்ருள் சகுந்தலா.

'சரி, கொஞ்சம் லேக் பக்கம் பார்த்துட்டு அப்படியே வீட் டுக்குப் போயிடலாம், வா!' என்ருர் ராமமூர்த்தி. அங்கிருந்து இருவரும் லேக் ஏரியாவுக்குப் போளுர்கள். -

சகுந்தலா உற்சாகமில்லாமல் காணப்பட்டாள். காரிலேயே வீட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டார்கள். .

டிரைவர் மறுபடியும் இரண்டு மணிக்கு வந்து, 'புறப்பட லாமா?' என்று கேட்டபோது, 'இல்லை: நீங்க வண்டியை எடுத்துட்டுப் போயிடுங்க! இன்றைக்கு இனிமே நாங்க வெளி யிலே போகப் போறதில்லை!" என்ருள் சகுந்தலா.

'நாளைக்கு வரட்டுமா?’ என்று கேட்டான் டிரைவர். 'நாளைக்கும் வேண்டாம்.'

ஊர் சுற்றிப் பார்த்த களைப்பில் ராமமூர்த்தி அயர்ந்து தூங்கிவிட்டார். கண் விழித்ததும் கெடியாரத்தைப் பார்த் தார்."ஐயோ, நாழியாயிடுத்தே! வெளியே போகவேண்டாமா, சகுந்தலா?' என்று கேட்டார்.

சகுந்தலா சோபாவில் மெளனமாய் யோசனையில் ஆழ்ந் திருந்தாள்.

Z75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/168&oldid=1028147" இலிருந்து மீள்விக்கப்பட்டது