பக்கம்:ஆப்பிள் பசி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“என்ன சகுந்தலா! ஏன் இப்படிப் பிரமை பிடிச்ச மாதிரி இருக்கே? என்ன ஆச்சு உனக்கு? சீக்கிரம் புறப்படு, கார் வந்துடும்' என்ருர் ராமமூர்த்தி.

'அப்பா! உடம்பு ஏதோ மாதிரி இருக்கு. மனசிலும் உற்சாக மில்லை. வண்டியைத் திருப்பி அனுப்பிச்சுட்டேன்' என்ருள் சகுந்தலா. ,

'அப்படியா? பேலூர் மடத்துக்குப் ப்ோகணும்னு ஆசைப் பட்டியே!' -

"ஆமாம். இப்ப வேணும். இன்னெரு சமயம் வரும்போது பார்த்துக்கலாம்' என்ருள். அவளுக்கும் ஆசைதான். ராம கிருஷ்ணரை நிறையப் படித்திருக்கிருள். அவர் உபதேசம் ஒவ்வொன்றும் உபநிஷதம்போல இருப்பதாகச் சொல்லியிருக் கி(ாள்.

'மாபதி வந்தவுடன் என்னை எழுப்பு. சாப்பிடுகிறேன்" என்றது குழந்தை. - » z

'உன் பசியே உன்னை எழுப்பிவிடும்' என்ருள் தாய்.

அடேயப்பா! எத்தனை சுருக்கமாக அமைந்துவிட்ட தத்துவம் இது! இந்தச் சுருக்கத்திலும் எத்தனை சுலபமாக அர்த்தத்தை வெளிக் காண்பிக்கிறது!’ - - -

அந்த உயர்ந்த மகானின் பாதம் பட்ட பேலூர் மடத்தைப் பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை இப்போது அமுங்கிப் போயிருந்தது. -

"என்ன சகுந்தலா இது! உன் உடம்புக்கு என்ன? மறுபடி யும் எப்போ கல்கத்தா வரப் போகிருேம்? எப்போது பேலூர் பார்க்கப் போகிருேம்? ட்ர்கூர், டாகூர்னு உயிரை விடுவயே! அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டாமா ?” என்ருர் ராமமூர்த்தி. - -

மனசின் அடி ஆழத்தில் ஒரு தீ கிழித்த மாதிரி இருந்தது. ஒருகணம் உடலில் பளிச்சென்று வெளிச்சம் பரவி அடுத்த கணம் அழிந்தது. "அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்காகவே ஒருமுறை வந்தரப் போச்சு' என்று தீர்மானமாய்க் கூறிவிட் டாள். அவள் உற்சாகம் குன்றி வித்தியாசமாக நடந்து கொண்ட விதம் ராமமூர்த்திக்குக் கவலை தந்தது. -

'வெளியே போயிட்டு வரலாம். வா. அப்புறம் எல்லாம் சரியாயிடும்' என்ருர்.

'இல்லைப்பா!'

"ஏம்மா, என்ன விஷயம்? மறுக்காமல் சொல்லு' என்று ராமமூர்த்தி குனிந்து அவளது கையை எடுத்து நாடி பார்த்தார். நெற்றியில் கை வைத்தார்.

'காய்ச்சல் எதுவும் இல்லையே!”

'உள்ளுக்குள்.இருக்க்ப்பா!'

'மருந்து ஏதாவ்து?"

‘'வேண்டாம்.'

I76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/169&oldid=1028150" இலிருந்து மீள்விக்கப்பட்டது