பக்கம்:ஆப்பிள் பசி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீட்டுக்குள் நுழைந்ததுமே, "மிஸ்டர் ராமமூர்த்தி!' என்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

'இன்னிக்கு என்ன கிளப்புக்குவரல்லியா?' என்று கேட்டுக் கொண்டு வந்தார் பஞ்சாபகேசன்.

'இல்லை! எனக்கு உடம்பு சரியில்லை.' - "அப்படியா! சரி; ஒய்வு எடுங்க! நான் வரேன்!' என்று போய் விட்டார் பஞ்சாபகேசன்.

சகுந்தலாவை எண்ணிய போது ராமமூர்த்திக்குக் கண்ணிர் வந்துவிட்டது. கைக்குட்டையால் கண் களைத் துடைத்துக் கொண்டார். இதற்குள் சகுந்தலா வந்து விட்டாள். அவள் காரிலிருந்து இறங்கும் போதே, 'வந்துட்டியா சகுந்தலா! ஒரே கவலையாயிடுத்து' என்ருர்.

கல்கத்தாவுக்குப் போகும் போது அவளிடமிருந்த ஆனந் தம், அங்கே அவளிடம் காணப்பட்ட குதுகலம் எல்லாம் இப்போது மேகத்தில் மறைந்து விட்டன.

கல்கத்தாவைச் சுற்றிப் பார்க்கக் கூட விருப்பமின்றித் திரும்பி விட்ட விரக்தி, ஊருக்குத் திரும்பியதும் சோர்ந்து படுத்துவிட்ட நலிவு, காய்ச்சல், அவளை விட்டுப் போய்விட்ட அந்த நிரந்தர உல்லாசம், சிரிப்பு, புன்னகை - இதற்கெல்லாம் என்ன காரணம்?

இன்று மல்லிகை ஒடைப் பாதையில் அவள் தனிமையில் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் புரிந்தது.

காதல் என்ற மாயப்பிணி சகுந்தலாவையும் பற்றிக் கொண் டிருப்பதை உணர்ந்தார். அந்தக் காதல் யார் மீது? -

'சாமண்ணு மீதா? படிப்பு வாசனையே இல்லாத அந்தப் பாமர நடிகனையா சகுந்தலா காதலிக்கிருள்?

இவ்வளவு நாகரிகமாக வளர்ந்துள்ள சகுந்தலாவா சாமண் ளுவைக் காதலிக்கிருள்? - - - -

தனக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத, அந்தஸ்து இல்லாத ஒரு சாதாரண நடிகனைத் தேர்ந்தெடுக்க அவள் மனம் எப்ப ஒப்பியது?

ஒருவேளை அவன் கலையில், நடிப்புத் திறமையில் மயங் விட்டாளா? ஆச்சரியம்!

சகுந்தலா! வாழ்க்கையில் எத்தகைய தவறு செய்து விட் டாய் நீ! உன் உள்ளத்தை நீ ஒருவனிடம் பறிகொடுப்பது தவறல்ல! அது இயற்கை, ஒப்புக் கொள்கிறேன். ஆனல் அந்த ஒருவன்' அதற்குத் தகுதியானவன்தான என்பதைச் சிறிதாவது யோசித்துப் பார்த்தாயா? படித்த பெண்ணுன நீயா இப்படிச் செய்வது? -

மறுநாள் மாலை டாக்டர் டிஸ்ட்ரிக்ட் கிளப்புக்குப் போயி ருந்த போது அங்கே லில்வர் ஸ்க்ரீன்' என்ற பத்திரிகை வந்திருந்தது. -

180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/173&oldid=1028158" இலிருந்து மீள்விக்கப்பட்டது