பக்கம்:ஆப்பிள் பசி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இந்தா சிங்காரம்! நம்மூர் மாதிரி உரக்கப் பேசாதே! நாட்டுப்புறம்னு நினைப்பாங்க! இப்படி உட்காரு. உன்னைக் காக்க வெச்சதுக்குக் காரணம் அவங்களை முதல்லே அனுப் பிச்சுட்டு உன்னோடு சாவகாசமாப் பேசணும்னுதான்.'

இன்னும் உணர்ச்சி வசத்தில் இருந்த சிங்காரப் பொட்டு, 'அண்ணே, நீங்க இப்படி இவ்வளவு பெரிய ஆளா வருவீங் கன்னு எனக்கு அப்பவே தெரியும். அதனாலேதான் நீங்க கல்கத்தா போறதை நான் தடுக்கலை. இப்போ உங்க வாழ்க்கை அடியோடு மாறிப் போச்சு! என் மகிழ்ச்சிக்கு அளவு கிடை யாது... எனக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க' என்று சொல்லி திடீரென்று முழங்கால் போட்டு சாமண் விைன் கால்களைப் பற்றினன். - -

'இந்தா! இந்தர்! சிங்காரம்! என்ன இதெல்லாம்?' என்று சர்மண், பைதற்றத்தோடுகால்களை உயரத்தில்துக்கிக்கொள்ள, பிடிவாதமாய் அவன் பாதங்களைத் தொட்டுக் கண் ணில் ஒற்றிக் கொண் டான் சிங்காரம்.

'உங்ககிட்டே ஒரு முக்கிய சமாசாரம் சொல்லனும் அண்ணே ! அதுக்குத்தான் கல்கத்தா வந்திருக்கேன்!'

'சிங்காரம்! நீ எது வேணுமானுலும் சொல்லு. ஆன இந்த 'அண் ணே, அண் ைே மட்டும் வேணும். இப்ப சொல்லு. அதென்ன அப்ப்டிப்பட்ட சமாசாரம்?' என்று கேட்டான் சாமண் ன .

'நீங்க நாடகத்தை விட்டுட்டுப் போனிங்களா? உங்க இடத்தை எனக்குத் தந்துட்டுப் போனிங்களா? நானும் அதிலே நடிச்சே?ை இப்போ பேரும் புகழுமா வாழறேன். பணங் காசும் நிறையவே கிடைக்குது. அண்ணன் புண் ணியத்திலே, (நாக்கைக் கடித்துக் கொண்டு) உங்க புண்ணியத்திலே நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!' என்ருன் சிங்காரப் பொட்டு. - -.

கையோடு கொண்டு வந்திருந்த திராட்சைப் பழங்களை எடுத்துச் சாமண்ணுவின் முன் வைத்தான்.

சாமண்ணுவின் இடது மூக்கோரம் ஒரு வரி தோன்றி சட் டென்று மறைந்தது. 'இதெல்லாம் எதுக்கு?' என்று ஒரு பந்தாவோடு செல்லமாகக் கண்டித்தான். -

'இன்னிக்கு உங்களால்தானே எனக்கு இந்தப் பவிசெல் லாம்? அதை நான் மறந்துட முடியுமா?’’

'சிங்காரம்! நீ எனக்கு ஒரு முறை விட்டுக் கொடுத்தாய். அதைப் போல நான் ஒருமுறை உனக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பர உதவி!-அவ் வளவுதானே?' என்ருன் சாமண் ணு, .

'எனக்கு நீங்க செஞ்ச உதவி சாதாரணம் இல்லை. நீங்க போட்ட பிச்சையிலே வாழ்ந்துக்கிட்டிருக்கேன். இல்லாட்டி எனக்கு இப்படி ஒரு கெளரவம் கிடைச்சிருக்குமா?’’ - 184

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/177&oldid=1028165" இலிருந்து மீள்விக்கப்பட்டது