பக்கம்:ஆப்பிள் பசி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டைய நம்பராயிருக்கும். சின்ன வயசிலேயே அப்பா அம்மாவை இழந்து அைைதயா ஊர் ஊரா அலைஞ்சேன். கடைசியிலே டிராமாக் கம்பெனியிலே சேர்ந்தேன். அங்கேயும் கோமாளி வேஷம்தான். அரைப்பட்டினிதான். என் வாழ்க்கையே ஒரு நாடகமாப் போச்சு. மொத்தத்திலே நான் ஒரு கத்தரி யோகக்காரன்” என்று விரக்தியோடு சொன்ஞன் சர்மண்ணா.

“கவலைப்படாதீங்க. சீக்கிரமே நல்ல காலம் பொறக்கும்” என்றான் குமாரசாமி.

அப்போது மீண்டும் அந்த மின்விளக்கு எரிய ஹால் பிரகாசமாயிற்று. “பார்த்தீங்களா!”

காலையில் காகம் கரையும் முன்பே எழுந்துவிட்ட பாப்பா அந்த வீட்டையும் வாசலையும் பெருக்கிச் சுத்தப்படுத்தி விட்டு, “சாமண்ணா படுத்துள்ள அறையைப் பெருக்கலாமா?” என்று எட்டிப் பார்த்தாள்.

அவன் அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தான்.

‘அப்பா கூட இன்னும் எழுந்திருக்கலையே! இவங்க எழுந்திருப்பதற்குள் குளியல் வேலையை முடித்துவிடலாம்’ என்று எண்ணியவளாய் பாத்ரூமுக்குள் சென்றபோது கதவு மக்கர் செய்தது. காலின் கீழே கிடந்த செங்கல்லைத் தள்ளிக் கதவுக்கு முட்டுக் கொடுத்து, சடுதியில் குளியலை முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குமாரசாமி வேப்பங்குச்சி ஒடித்துப் பல் விளக்கிக் கொண்டிருந்தான்.

“அப்பா, அவர் எழுந்துட்டாரா பாருங்க.”

குமாரசாமி அறையில் எட்டிப் பார்த்து ‘தம்பி!’ என்று குரல் கொடுக்க, சாமனண்ணா எழுந்து உட்கார்ந்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. “உடம்பெல்லாம் வலிக்குது, தலைவலி தாங்க முடியலே...” என்றான்.

“டாக்டரை அழைச்சுட்டு வரட்டுமா?”

“வேணாங்க, சூடா காப்பி சாப்பிட்டா எல்லாம் சரியாப் போயிடும். இதுக்கெல்லாம் டாக்டரைக் கூப்பிட்டா கட்டுப்படி யாகுமா?”

அவனைத் தொட்டுப் பார்த்த குமாரசாமி, “உடம்பு சுடுதே!” என்றான்.

பாப்பா பதறிப் போய், “அப்பா, நீங்க சீக்கிரம் போய்க் காப்பி வாங்கிட்டுவாங்க” என்றாள்.

குமாரசாமி படி இறங்கிப் போனதும், “தலையை ரொம்ப வலிக்குதா” என்று கேட்டுக் கொண்டே சாமண்ணா அருகில் போய் அவன் நெற்றியைப் பிடித்து விட்டாள்.

சாமண்ணாவுக்கு அது இதமாக, ஆறுதலாக, இனிமையாக இருந்தது. வலியெல்லாம் குறைந்து விட்டது போல் தோன்றியது.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/18&oldid=1028377" இலிருந்து மீள்விக்கப்பட்டது