பக்கம்:ஆப்பிள் பசி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வர மாட்டாரா? என்னைக் காத்திருக்கச் சொல்லிட்டுப் போனரே! கார் அனுப்பறதாச் சொன்னரே!'

'சொல்லியிருப்பார். இப்போ யாரோ வந்துட்டாங்க! முக்கியமான விஷயம் பேசிட்டிருக்காங்க. இப்ப அவர் கிட்டே யாரும் போய் எதுவும் பேச முடியாது. நீங்க நாளைக்கு வாங்க." இங்கும் அங்கும் பார்த்து விட்டு மெள்ள வெளியே சென் ருன். 'அண்ணன் ஒரு வார்த்தை டிரைவர் கிட்டே சொல்றதுக் குள்ளே மளமளன்னு இவ்வளவும் நடந்து போச்சு! அண்ணன் என்ன செய்வாரு, பாவம்! மறந்திருப்பாரு!”

வாசல் தோட்டம் பூராவும் நடந்து போய்த் தயங்கினன். கேட்டில் நின்ற காக்கிச் சட்டை ஒரு மாதிரியாகப் பார்க்க, 'பாஷை தெரியாதவன். ஏதாவது திட்டப் போகிருன்’ என்று அஞ்சி அவசரமாக வெளியே நடந்தான். -

"சினிமான்ன அது வேற மாதிரிதான். அண்ண்னும் அந்த அம்மாவும் ஒத்திகை எடுக்கருங்க போல இருக்கு! அடே யப்பா! அந்த அம்மா என்னமா இருக்காங்க!”

ரிக்ஷாவைத் தேடினன். 'ஒருவேளை இவங்களை ஜோடி ஆக்கி வச்சுட்டாக் கூட... அப்படி நினைக்க சிங்காரப் பொட்டுவுக்கு மனம் ஒப்ப வில்லை. அந்த எண்ணத்தோடு இணங்க அவன் மனம் மறுத்தது. தமிழ்நாட்டை விட்டு சாமண்ணுவையும் அவனது அபார நடிப் பையும் வெளியே விட்டுவிடத் தயாராக இல்லை.

ஊர் சுற்றிப் பார்த்தான். வீதிகளில் நடந்தான். கால் வலி எடுக்கும் வரை அலைந்தான். பசி எடுக்கவே கோமள விலா ஸ்-க்குப் போய்ச் சாப்பிட்டான். பிறகு படுத்ததுதான் தெரி யும். அயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு மீண்டும் அந்த பங்களாவுக்கு வந்து சேர்ந்தான்.

முந்திய தினத்தைப் போலவே இன்றும் பல பேர் உட்கார்ந் திருந்தார்கள்.

தற்செயலாய் அந்தப் பக்கம் வந்த சாமண்ணு சிங்காரத் தைப் பார்த்துவிட்டு, 'என்ன சிங்காரம்! நீ வந்திருக்கே இல்லே! நேத்து வந்தே இல்லே! மறந்தே போயிட்டேன். எப்படி மறந்தேன் என்று எனக்கே தெரியலை. கோமள விலாஸ்லதானே தங்கியிருக்கே! அங்கேயே இருந்துக்க. செலவைப் பற்றிக் கவலைப்படாதே. அதெல்லாம் நான் பார்த் துக்கறேன். எத்தனை நாள் இருப்பே?' என்று நேற்று சொன்னதையே திரும்பச் சொன்னன். -

'எனக்கு இங்கே என்ன வேலை? உங்களைப் பார்த்தாச்சு, புறப்பு வேண்டியதுதான். அதுக்கு முன்னடி ஒரே ஒரு

6nেg !" 'என்ன சொல்லு.' 'நீங்க சினிமாவிலே நடிக்கிறதை என் கண்ணுலே பார்த் துடனும்' -

187

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/180&oldid=1028172" இலிருந்து மீள்விக்கப்பட்டது