பக்கம்:ஆப்பிள் பசி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இவ்வளவுதான? சினிமா எடுக்கிறதைப் பார்க்கணுமா? "ஆமாம்!” 'அடப் பாவமே! வெளிப்புறக் காட்சியெல்லாம் எடுத்தா யிட்டுதே! நாளைக்கு மறுபடியும் காட்டுக்குள்ளே போய் எடுக்கப் போருங்க. அதுதான் கடைசி.' .

'நானும் வரேன், காட்டுக்குள்ளே!' 'அங்கே விருந்தாளிங்க யாரையும் அழைச்சுட்டு வரக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க!'

'அதுக்கப்புறம் வேற எங்கயும் எடுக்க மாட்டாங்களா?” 'மங்களக் காட்சி மட்டும் இங்கே திரும்பி வந்து எடுப்பாங்க! ஒரு வாரம் ஆகும். அதுவரை நீ இங்கேயே தங்கிடு!' அடுத்த வாரம் அந்த மங்களக் காட்சியைப் பார்த்துட்டுப் போகலாம்!' என்ருன் சாமண்ணு. -

'ரொம்ப சந்தோஷம்.' 'அப்போ, ஒட்டலுக்குப் போறியா? வண்டியிலே உன்னை அனுப்பி வைக்கிறேன். யாரப்பா! டிரைவரைக் கூப்பிடு.”

இந்த முறை ரிக்ஷாவுக்கு அலையாமல் கப்பல் போன்ற காரில் மிகப் பெருமையோடு போய் ஒட்டல் வாசலில் இறங் கின்ை சிங்காரப் பொட்டு.

முந்திய நாள் தோன்றிய சிறுமை நினைவுகள் யாவும் இன்று அழிந்து விட்டன. சந்தோஷ அலைகள் மனத்தைப் புரட்டி எடுத்தன. - -

ஒட்டலில் தங்கிக் கொண்டு தினம் ஒரு இடமாகப் போய்ப் பார்த்து விட்டு வந்தான். தினமும் கொஞ்சம் 'விஸ்கி' போட்டுக் கொண்டான். -

கல்கத்தா உண்மையில்பெரியஅதிசயபுரியாகத்தோன்றியது. இரவில் பார்க் தெருப் பக்கம் போனபோது விளக்குகள் செய்த ஜாலங்களும் நாகரிக யுவதிகளின் நடமாட்ட மும் சொப்பனம் போல் இருந்தன.

ஒரு வாரம் ஒடியதே தெரியவில்லை. கணக்காக எட்டாவது நாள் சாமண்ணு வீட்டில் போய் நின்ருள்.

சாமண்ணு இன்னும் அவுட்டோர் ஷகுட்டிங்கிலிருந்து திரும்பி வரவில்லை என்று சொன்னர்கள்.

எப்படியும் அண்ணன் சினிமாவில் நடிப்பதை ஒருமுறை யாவது பார்த்துவிட வேண்டும் ள்ன்று தீர்மானமாய்க் காத் திருந்தான். -

மேலும் ஒரு வாரம் தாமதித்த பின் மீண்டும் சாமண்ணுவைத் தேடிச் சென்றபோது வீட்டு வாசலில் பலர் கும்பல் கும்ப்லாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். சூழ்நிலையில் சோகம் தெரிந்தது. - -

தோட்டத்தில் ஆம்புலன்ஸும் கார்களும் பரபரப்பாயிருந் தன. சாமண்ணு திரும்பி வந்திருக்கும் அறிகுறிகள் தென்பட் 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/181&oldid=1028175" இலிருந்து மீள்விக்கப்பட்டது