பக்கம்:ஆப்பிள் பசி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்தபோது யாரோ, 'அடடே! சிங்காரம்' என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண் டிருந்தார்.

'வாங்க! எப்ப வந்தீங்க?' என்று விசாரித்த சேட்ஜி அவனை சாமண்ணு இருந்த அறைக்குக் கூட்டிச் சென்று காட்டி ஞர். சாமண்ணு நினைவு தப்பிய நிலையில் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரு சிறு கூட்டம். -

சிங்காரத்துக்கு உடம்பு பதறியது. 'அண்ணே' என்று கத்தி விடலாம் போல இருந்தது. கண்களில் நீர் தளும்பியது.

அவன் சங்கடத்தை உணர்ந்தசேட்ஜி அவனுடையகைகளைப் பிடித்து இழுத்து, 'வாங்க போகலாம்' என்று வெளியே அழைத்துச் சென்ருர்,

'இன்னும் அஞ்சு நிமிஷத்திலே சாமண்ணுவை ஆஸ்பத் திரிக்குக் கொண்டு போகப் போருங்க. காலில் பலத்த அடி. இங்கேயே இப்படியே நில்லுங்க. அதோ டாக்டர் வரார். அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்' என்று ஓடினர்.

சேட்ஜி திரும்பி வந்தபோது அவர் முகத்தில் கவலை கவ்விக் கொண்டிருந்தது. -

"டாக்டர் என்ன சொல்கிருர்?' என்று பதறினன் சிங்காரம். "ஆஸ்பத்திரிக்குப் போனப்புறம்தான் எதுவும் தெரியுமாம். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணுமாம். காலை எடுத்துடுவாங் களோ, என்னவோ?' என்று கவலைப்பட்டார் சேட்.

"ஐயோ! எங்க அண்ணனுக்கு அப்படியெல்லாம் ஆயிடக் கூடாது' என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுத்ான். 190 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/183&oldid=1028180" இலிருந்து மீள்விக்கப்பட்டது