பக்கம்:ஆப்பிள் பசி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சுபத்ரா முகர்ஜி வந்து சேர்ந்தாள். வாசலில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.

'தள்ளுங்க! தள்ளுங்க!' என்று சில குரல்கள். சுபத்ராவுக்கு வழி ஏற்படுத்தி அவளை உள்ளே அழைத்துச் சென்ருர் சேட். சாமண்ணுவின் கால்களைப் போர்த்தியிருந் தார்கள். சாமண்ணு அறைக்குச் சென்ற சுபத்ரா அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. உடனே ஹாலுக்குத் திரும்பி விட்டாள். அவள் முகம் கரைந்து போயிருந்தது. சேட் துயரம் தோய்ந்த முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அவள் அருகில் போய் நின் ருர். 'வீட்டுக்கு வாங்க சேட்! விவர்மாப் பேசணும்' என்று கூறிவிட்டுக் கார் ஏறிப் போய் விட்டாள்.

இதற்குள் ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள் வந்து சாமண்ணுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்ற, அது பெரிய ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.

சிங்காரத்திற்கு இருப்புக் கொள்ளவில்லை. சாமண்ணுவுக்கு ஏற்பட்ட விபத்து அவனைக் கலக்கிவிட்டிருந்தது. ஆஸ்பத்திரி இருக்குமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தனியாகச் சாலை ஒரமாகவே நடக்க முற்பட்டான்.

அப்போது யாரோ கையைத் தட்டி அழைப்பது தெரிந்தது. திரும்பினல் சேட்! - -

'இந்தாங்க சிங்காரம்! இப்போ எங்கே தங்கியிருக் கீங்க?' என்று கேட்டார்.

'கோமள விலாஸ்லே.' 'செளகரியமா இருக்கா?’’ 'அண்ணன்தான் ஏற்பாடு பண்ணியிருக்கு! ஆன அண்ண னுக்கு இப்படி ஆயிடுச்சே!' என்று புலம்பினன்.

'நீங்க கவலைப்படாதீங்க. தெய்வம் துணை புரியும். இப்ப நீங்க ஒட்டலுக்குத்தான் போயிட்டிருக்கீங்களா?'

'அண்ணனை இந்த நிலையில விட்டுட்டு எப்படிங்க போக முடியும்? ஆஸ்பத்திரிக்குப் போயிட்டிருக்கேன்.'

'இப்ப ஆஸ்பத்திரியில் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. நீங்க ஒட்டலுக்குப் போறதுதான் நல்லது. வாங்க உங்களை ஒட்டலிலே விட்டுறச் சொல்றேன், கம்பெனி வண்டி இருக்கு" என்று கூறிய சேட் தம் கையைத் தூக்கிக் காண்பிக்க வரிசை யாக நின்ற கார்களில் ஒன்று வரிசையிலிருந்து விடுபட்டு அவரைத் தேடி வந்தது.

'ஏறிக்குங்க.' சிங்காரம் அரை மனத்தோடு ஏறிக் கோமளவிலாஸ்-க்குச் சென்ருன். - - - -

சேட்ஜி ஆஸ்பத்திரி வரை சென்று சாமண்ணுவை ஸ்பெ ஷல் வார்டில் சேர்த்துவிட்டு, "இதோ வந்துடறேன்' என்று

I 91 7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/184&oldid=1028183" இலிருந்து மீள்விக்கப்பட்டது