பக்கம்:ஆப்பிள் பசி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘'எதுக்கும் அண்ணனை ஒரு வார்த்தை கேட்டுடுவோம்.' 'அவர் என்ன சொல்லப் போருர்? படம் நல்லபடியா முடிஞ்சாப் போதும்னுதான் நினைப்பார். நீங்க நடிக்கிறதைத் தான் அவரும் விரும்புவார். அது எனக்குத் தெரியும்' என்ருர் சேட்ஜி. *

மறுநாளே சிங்காரத்தை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போளுர்கள். குதிரைக்குப் பதில் கார் உச்சி மீது ஒரு ஆசனம் வைத்து, அதைக் குதிரை சவாரி போல் சாமர்த்தியமாகப் பட மாக்கினர்கள். *

அரண்மனையிலும் ஒன்றிரண்டு காட்சிகள் எடுத்தார்கள். அப்புறம் இரண்டே வாரத்துக்குள் முடித்து விட்டார்கள்.

இடையில் சிங்காரம் இரண்டு முறை சேட்டோடு ஆஸ்பத்திரிக்குப் போய் சாமண்ணுவைப் பார்த்துவிட்டு வந் தான,

'ஆபரேஷன் ஆகியிருக்கு' என்று மட்டும் சொன்னர்கள். மேற்கொண்டு விவரம் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.

61°೭qಹ வேலை முழுவதுமாக முடிந்ததும் சேட்ஜி அந்தப் படத்தில் நடித்தவர்கள், டெக்னிஷியன்கள் எல்லாரை யும் ஒருநாள் விருந்துக்கு அழைத்திருந்தார். சாமண்ணுவைத் தவிர எல்லோரும் வந்திருந்தனர். சுபத்ரா வந்திருந்தாள். டைரக்டர் அவளுக்கு மாலை அணிவித்துப் பாராட்டிப் பேசி ஞர். 'இந்த நேரத்திலே சாமண்ணு இங்கே இல்லாதது பெரும் குறைதான்' என்ருர்.

விருந்து முடிந்து எல்லோரும்வீட்டுக்குப்புறப்பட்டுச் சென்ற தும் சேட்ஜி சிங்காரத்தைத் தனியாக அழைத்துப் பேசினர்.

"இந்தா, சிங்காரம் சகுந்தலை படம் நல்ல விலைக்கு வித்துப் போச்சு! அடுத்தது சாவித்திரி எடுக்கப் போறேன், அப்புறம் 'தேவயானி". அந்த இரண்டு படங்களிலும் நீங்கதான் நடிக்க ணும். என்ன சொல்றீங்க?' என்று கேட்டார்.

சிங்காரத்திற்கு வியர்த்தது. 'நான' என்று இழுத்தான். "ஆமாம்! உங்களுக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்காம். டைரக்டர் சொல்ருர். உங்களை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. சுபத்ராவும் ஒத்துக்கிட்டாங்களாம்!' r

திடீரென்று அவனுக்குச் சொர்க்க வாசல் திறந்து விடுவது போலிருந்தது. கூடவே சாமண்ணுவின் நினைவும் தோன்றிச் சங்கடப்படுத்தியது. !

"ஏங்க! அண்ணன்தான் வீட்டுக்கு வந்தாச்சே! அப்புறம் என்ன? உடம்பு தேறினதும் கொஞ்ச நாளில் அவரையே போட்டு எடுத்துட வேண்டியதுதானே? எதுக்கும் அவரை ஒரு வார்த்தை கேட்டுருங்க. அவர் இடத்தை அவர் சம்மதம்

19$

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/186&oldid=1028187" இலிருந்து மீள்விக்கப்பட்டது