பக்கம்:ஆப்பிள் பசி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சிரியங்காலம் எல்லோருமாக ஆஸ்பத்திரிக்குப் போகும் போது, சுபத்ராவுக்காகக் காத்திருந்தார்கள். அரைமணி காத்திருந்த பிறகு,

சேட் எழுந்து போய் டெலிபோன் பண்ணிப் பார்த்துவிட்டு, 'இன்னும் வீட்டுக்கு வரலேயாம் ஜீ' என்று டைரக்டரிடம் சொன்னர். டைரக்டர் பொறுமை இழந்து கொண்டிருந்தார். 'வந்திரட்டம். அவங்க இல்லாம போன நல்லா இருக் குமா?' என் டைரக்டரைப் பார்த்துக் கேட்டார்.

டைரக்டர் பதில் பேசாமல், குழாயில் புகையிலைத் துளை நிரப்பிக் கொண்டிருந்தார். எல்லோரும் மணியை அடிக்கடிப் பார்த்தார்கள். ஆறு, ஆறேகால், ஆறரை, ஆறேமுக்கால், ஏழு. எல்லோரும் நிதானமிழந்த நிலையில் சேட்டைப் பார்த் தனர். அவர்களது பார்வை சேட்டைக் கிளப்பி விட்டது. போன் அருகில் உட்கார்ந்து திரும்பவும் சுழற்றினர் 'நான்தான் சேட் பேசறேன்." 'எல்லோரும் காத்திருக்கோமே!'

  • * * * * *

அதற்குப் பிறகு சேட் வெகுநேரம் ஹாம் ஹாம் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். -

அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. போனைச் சோர்வுடன் கீழே வைத்தார்.

§§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/189&oldid=1028195" இலிருந்து மீள்விக்கப்பட்டது