பக்கம்:ஆப்பிள் பசி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் வருத்தம் தோய்ந்து நின்றனர்.

இப்போதுதான் சாமண்ணுவுக்கு ஒர் உண்மை பளிச்சிட்டது. இத்தனை நாளும் ஸ்டுடியோவில் கும்பலாக இருந்து உரசி, தழுவி, ஏசி, இணைந்து தனித்தனி மனிதர்களாக இயங்கினர். தள். இவர்கள் அத்தனை பேர் ஊடேயும் இப்போது தனியான நேசம் ஒன்றும் ஒரு குடும்பப் பாசமாக மாறியிருப்பதை உணர்ந்தான். - .

இல்லாவிடில் அன்னிய நாட்டில் பிறந்த இந்த வெள்ளைக் கார டைரக்டர் எனக்காக ஏன் அழ வேண்டும்?

சாமண்ணு கையை அவர்பால் உயர்த்தின்ை. - அதைச் ச்ட்டென்று பற்றிக் கொண்டு, 'ஸ்ாம்- யூ” என்று வழக்கமான முறையில் அவன் பெயரை உச்சரித்தார். அதற்கு மேல் வார்த்தை வராமல் தத்தளித்து நின்ருர்.

காற்று ஒருமுறை விசும்பிக் கொண்டது. - 'சாமூ! நாங்கள் எல்லாரும் என்னென்னவோ செஞ்சு பார்த்தோம்! கவர்னர்கிட்டே பேசி, ஆஸ்பத்திரி டீன் கிட்டே சொல்லச் சொன்ைேம். அவங்களும் எவ்வளவோ செஞ்சு பார்த்தாங்க! வேற வழியில்லாமல் போச்சு. காலை எடுத்துட னும், எடுக்காட்டி உயிருக்கு ஆபத்துன்னு சொல்லிட்டாங்க" என்ருர் சேட். - - -

சேட்டிடம் அவ்வளவு பெரிய இதயம் இருக்கும் என்று சாமண்ணுவுக்குத் தெரியாது. .

சொந்த மகனுக்கு நேர்ந்த்துபோல் அவர் விசித்ததைக் கூடி

நின்ற அத்தனை பேரும் தங்கள் கால்களையே இழந்தவர்களைப்

பிருந்தவர் எல்லாரும்ே கண்டு கண்கலங்கினர்.

சாமண்ணுவின் மனம் நெகிழ்ந்து கூழாகிவிட்டது. இத. : அடைத்தது. - * -

அவர்கள் வரும் அந்த நிமிடம்வரை, 'இந்த வாழ்க்கை இனி எதற்கு? என்றுதான். எண்ணிக் கொண்டிருந்தர்ன்.

ஆல்ை இப்போது இவர்களது இரக்கங்களைப் பார்க்கிற போது எங்கிருந்தோ ஒரு புதிய தென்றல் வீசி அவனைப் பரவசமாக்கியது. - - .

ஆகா, இவர்களது பாசத்தை அடைவதற்காகவே வாழ வேண்டும் என்று மன்சு அடித்தது. -

"சேட் ரொம்பப் புண்ணிய்ம் பண்ணி இருக்கேன். உங்க அன்பைப் பெற்றதற்கு! என்னை உயரத்தில் கொண்டு வைக் கணும்னு ரொம்பப் பாடுபட்டீங்க. அதிலே ஏதோ ஒரு அம்சம் ஆண்டவனுக்குப் பிடிக்கலை. இப்படி ஆயிட்டேன்! என் சொப் பனத்திலேகூட நினைக்கலை, நான் இப்படி ஆவேன்னு! ஒரே திமிஷத்திலே கடவுள் என்னை ஒருவயோதிகன் ஆக்கிட்டாரே!

மேலே பேச்சு ஓடவில்லை. க்ல்கல என்று நீர் கொட்டியது. சேட் அவன் கையைப் பிடித்தார். மார்பை மென்மையாகத் தொட்டார். - - o

198

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/191&oldid=1028199" இலிருந்து மீள்விக்கப்பட்டது