பக்கம்:ஆப்பிள் பசி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'சாமூ! கவலைப்படாதீங்க! ஆண்டவன் எப்போதும் தவறே செய்யமாட்டார்.தவறுமாதிரிதோன்றிலுைம்அதுநன்மையிலே தான் முடியும். இப்போ படத்தை முடிச்சுட்டேன்! வாங்கற துக்குப் போட்டாப் போட்டி! சாமூ! இதிலே பணம் சம்ப்ா திச்சா, நான் பேசின. தொகைக்கு மேலே இன்னெரு மடங்கு கொடுத்துருவேன்! உங்களை அம்போன்னு விட்டுறமாட்டேன். நீங்க கவலைப்படாதீங்க. மனேதிடத்தோடு இருங்க!'

பிறகு, கூட வந்தவர்களும் தனித்தனி மனங்களைத் திறந்து தைரியத்தைப் பொழிந்தார்கள். -

இவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோதிலும் சாமண்ணு வின் மனம் மட்டும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி அறை வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தன சாமண்ணுவின் & Goro arr. -

கடைசியில் அடக்க முடியாத நிலையில், 'சுபத்ராவுக்குத் தெரியுமில்லே?' என்று கேட்டான். - 'தெரியும். அவங்ககூட இப்போ எங்களோடுவர்றதாத்தான் இருந்தாங்க! அதுக்குள்ள ஏதோ அவசரமா ஏதோ வேலைன்னு...' என்ருர் சேட்.

'அவங்களும் கோஷ-ம் கார்லே போயிட்டிருந்தாங்க! நான் புறப்பட்டபோது பார்த்தேன்!' என்று ஒரு வெகுளி துணைக் காமிராமேன் கூறினர். :

சாமண்ணுவின் முகத்தில் இறங்கிய அந்த நிழலை சிங்காரப் பொட்டு ஒருவனல்தான் கண்டுபிடிக்க முடிந்தது.

சிலகணங்கள் வரை, சாமண்ணுவின் பார்வை வெறுமை ஆகியது. சாமண்ணுவின் உள்ளம் வேதனைப் படுவதை உணர்ந்து கொண்ட சேட், -

"ஒருபுரோக்ராமுக்குப்போருங்க.வந்துருவாங்க!'என்ருர். அது தனக்காகச் சொல்லப்படும் ஆறுதல் வார்த்தை என்பதை சாமண்ணு புரிந்து கொண்டு வறட்சியாக ஒரு புன்னகை காட்டினன். - -

பிறகு உரையாடல் சினிமாவைப் பற்றித் திரும்பியது. எல்லோரும் சிறிது பரவசமாகப் பேசினர்கள். அந்தக் கணத்தில் சாமண்ணுவின் துக்கத்தை எல்லோருமே மறந்தார் dos on .

அரைமணியில் எல்லோரும் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போக, ஒரே ஒரு நிழல் மட்டும் தயங்கித் தயங்கி நின்றதை சாமண்ணு கவனித்தான். எல்லோரும் வெளியேறிவிட்ட பிறகும் சிங்காரப் பொட்டு திரும்பி வந்து நிற்பதைக் கண்ட சாமண்ணு, 'என்ன சிங்காரம்?' என்று கேட்க, முகத்தை 鸞 மூடிய வண்ணம் பதில் பேசாமல் நின்ருன் சிங்காரப்

பாட்டு,

சாமண்ணு அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண் #-#T gồT , -

  1. 39
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/192&oldid=1028203" இலிருந்து மீள்விக்கப்பட்டது