பக்கம்:ஆப்பிள் பசி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அண்ணே! இந்தக் கோலத்திலேயோ நான் உங்களைப் பார்க்கனும்? என்ஞல் தாங்க முடியலையே!”

புலம்பி விசிக்க, சிங்காரப் பொட்டுவின் விம்மல் அடங்க நேரம் ஆயிற்று.

'இந்தா பாரு, சிங்காரம்! நீ அழுதயான எனக்கு துக்கம் அடக்க முடியாம வந்துடும்! நீதானே என்னைச் சமாதானம் பண்ண வந்திருக்கே! அதை விட்டுட்டு நீயே அழலாமா?’’ என்ருன்.

சிங்காரம் அழுகையை அடக்கின்ை.

'இனிமே மாட்டேன்! இனிமே அழமாட்டேன். சாமா அண்ணே! கவலையே படாதீங்க! இதலை என்ன நடந்தாலும் சரி, இனிமே இந்த அடியவன்தான் தங்களுக்கு ஊன்றும் காலாய் இருப்பேன்! ஆமாம், நான்தான் அது! நாளுத்தான் இருப்பேன்!' என்ருன் ஆவேசம் வந்தவன் போல..

'சிங்காரம், பதட்டப்படாதே! மெதுவாகப் பேசு! மெதுவா...' என்று சொல்லியவாறு சாமண்ணு அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தான்.

சிறிது நேரம் வரை சாமண்ணுவின் அலையும் கண்களுக்கு இடம் கொடுத்துவிட்டு,

"அண்ணே!' என்ருன்.

சிங்காரத்தின் நா தழதழத்தது.

சாமண்ணு திடுக்கிட்டுத் திரும்பினன்.

"அவள் வரமாட்டா!'

சிங்காரம் தணிந்த குரலில் சொன்னன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/193&oldid=1028205" இலிருந்து மீள்விக்கப்பட்டது