பக்கம்:ஆப்பிள் பசி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31.

சிற்று தலை குனிந்திருந்த சாமண்ணு நிமிர்ந்தான். என்ன சொல்றே சிங்காரம்?’ என்ருன். -

”அவங்க அந்த்கோஷ் கூடப்போயிட்டிருக்காங்க' என்ருன் சிங்காரப்பொட்டு. .. - .

"சிங்காரம்! இந்த ஊர் நாகரிகம் வேற! இங்கிலீஷ்ல நாலு பேர்கிட்டே தைரியமாப் பேசுவாங்க! அவ்வளவுதான்; அப்புறம் வந்துருவாங்க பாரு' என்ருன். -

சிங்காரப் பொட்டுக்குச் சொல்வது போல் தனக்குத் தானே ஆறுதலாகக் கூறியது போல் இருந்தது அது. -

பேச்சை மாற்றி சாமண்ணுவை உற்சாகப்படுத்தும் நோக் கில், 'உங்க நடிப்பை ஸ்டுடியோக்காரங்களெல்லாம் ரொம்பப் பாராட்டருங்க” என்ருன்.

இதல்ை அண்ணனுக்குப் பெருமகிழ்ச்சி ஏற்படாது என் பது அவனுக்குத் தெரியும். அந்த வார்த்தைகள் சாமண்ணுவை மேலும் ஆழ்ந்து எதையோ நினைக்க வைத்தன.

சிங்காரம் மேலும் சிறிது நேரம் இருந்துவிட்டு விடைபெற் முன.

அன்றிலிருந்து தினமும் அவன் வந்தான். ஊர் உலகத்தைப் பற்றி இரண்டு வார்த்தை பேசினன். சற்று நேரம் இருந்து விட்டுத் திரும்பினன்.

சாமண்ணு மெளனங்களில் சோகத்தைக் கரைத்துக் கொண் டிருந்தான். அதிகம் பேசுவதில்லை. பேசிளுல் ஒன்றிரண்டு வார்த்தைகளோடு நின்றன. கண்கள் வெறுமையாகப் பார்த்தன. புன்னகைகள் வறண்டு வெகு நாட்களாயின.

204

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/194&oldid=1028207" இலிருந்து மீள்விக்கப்பட்டது