பக்கம்:ஆப்பிள் பசி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"உலகத்திலே யாரால் அதிக துக்கம் வரும்னு சொல் லுங்க?' என்று கேட்டார். * * * * *

'சாமண்ஞ் யோசித்தான். 'தெரியலேயே, சேட்ஜி! என்ருன். *,峪 'இது தெரியலையா? உலகத்திலே யார் மீது அதிக அன்பும் பாசமும் வைக்கிருேமோ அவர்களாலேதான் துக்கம் நிறைய வரும்னு சொல்லுவாங்க' என்ருர் சேட்!

சாமண்ணு பேசவில்லை. 'பந்தம் வச்சுக்கக் கூடாது.' அவன் கண்களில் கண்ணிர் பீறிட்டது. 'பந்தம் வச்சுக்கிற இடத்திலே இரண்டு பேருக்கும் நோக்கம் சரியாயிருக்கான்னு பாக்கணும். உங்க நோக்கம் என் நல்வாழ்க்கை மேலே இருந்து என் நோக்கம் உங்க பணத்து மேலே இருக்கக் கூடாது. இருவர் நோக்கமும் சம நோக்கா இருக்கணும். சம அளவா இருக்கணும். தாரதம்மியம் இல்லாம இருந்தா அது உன்னதமான நட்பா இருக்கும்.'

சாமண்ணு இன்னும் தவித்தான். 'நான் சொல்ல்லை; பெரியவங்க சொல்லி இருக் காங்க! சாமண்ணு, இதெல்லாம் நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. நீங்க தவருன இடத்திலே அன்பு செலுத்தி மனசைக் கெடுத்துக்கிட்டீங்க! அதை மறந்துருங்க! ஊஹஅம் வேண்டாம்! ஏதோ போன இடத்திலே புகுந்த அர்த்தமில்லாத பாசம்னு நினைச்சு விட்டுடுங்க! இல்லாட்டி இவ்வளவு இழைஞ்சவங்க, இந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு நடை வந்து பார்த்திருக்க மாட்டாங்களா?”

சாமண்ணு தலையைக் கவிழ்த்துக் கொண்டான். 'லெட்டர் எழுதி விட்டீங்களே! ஒரு வார்த்தை பதில் எழுதினங்களா? உடுங்க! உங்களுக்கு அந்தப் பாசம் வந்திருக்க வேணும். வெளுத்ததைப் பால்னு நினைச்சுக்கிட்டீங்க! இங்கே இந்த நகரத்திலே இங்கிலீஷ்காரன் நினைப்பு இறங்கியாச்சு. விடுங்க! ஒரு கெட்ட நினைவு! கை மாறிப் போனப்புறம் இன்னும் நினைவு வச்சா நாம்பதான் பைத்தியக்காரங்க!”

சாமண்ணுவின் கை சேட் கையோடு இறுகியது. வார்த்தை' வரவில்லை. தேவையுமில்லை! எல்லாமே பளிச்சென்று வெயில் பட்டுத் துலங்குவது போல் சேட் விளக்கிவிட்டார்.

சாமண்ணுவுக்குக் குமுறிக் கொண்டு அழுகையே வந்தது. ஒர் ஆசுவாச நிலை வந்ததும், 'சாமு!' என்று மீண்டும் ஆரம்பித்தார் சேட். 'மனசை ஆற்றிக்கிடுங்க. ரெண்டு. நாள்ல டிஸ்சார்ஜ் ஆகப் போlங்க. உங்களுக்கு இங்கே ஒரு வீடு எடுத்துத் தர்றேன். இன்னும் ஒரு மூணு மாசம் தங்குங்க. ஊருக்குப் போறதைப் பற்றி அப்புறம் நினைக்கலாம்' என்ருர். -

20.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/196&oldid=1028211" இலிருந்து மீள்விக்கப்பட்டது