பக்கம்:ஆப்பிள் பசி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுங்கிக் கொண்டிருந்தார்கள். * 喂,物

தலையை மட்டும் ஆமோதிப்பில் ஆட்டினன். இன்னும் கூட அவன் அடித்தளத்தில் ஒரு நினைப்பு! -

இந்தச் சமயத்தில் சுபத்ரா வந்து கையைக் காட்டி, போய் வாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொல்வாளோ என்று.

கண்ணைத் துடைத்தான். ஹெளரா. ஸ்டேஷனின் பெருத்த இரும்புக் கூடாரத்தைப் பார்த்தான். உள்ளே பிளாட்பாரங் களைப் பார்த்தான்.

எல்லாருக்கும் எத்தனை பேர் வந்து வழி அனுப்புகிரு.ர்கள்! அவனுக்கும் எத்தனை பேர் வந்திருக்க வேண்டியது!

கால் மட்டும் சரியாக இருந்து அவன் ஊருக்குத் திரும்பி யிருந்தால், பிளாட்பாரத்தில் கல்கத்தாவே கூடியிருக்கும்.

சுபத்ரா சன்னல் ஒரம் நின்று சோகத்துடன் பேசுவாள். சுற்றிலும் ஒரு காமிரா கூட்டமே அலையும்.

வந்தபோது அவனுக்குக் கிடைத்த விமரிசை என்ன? இப்போது நடக்கும் மெளனப் பிரிவு உபசாரம் எப்படி?

மணி அடித்தது. சேட்ஜி கையைக் காண்பித்தார். ரத்தினங்கள் போல் கண்கள் சொட்ட சாமண்ணு கையைக் காண்பித்தான்.

"அண்ணே, விட மாட்டேன் அண்ணே!” என்று சிங்காரப் பொட்டு பெட்டிக்குள் பாய்ந்தான்.

"அண்ணே! உங்க கூடத்தான் வருவேன். இங்கே வந்தது உங்களைப் பார்க்கத்தான். இடையிலே வந்த சினிமா வேணும். நீங்கதான் வேணும்' என்ருன்.

ஆவனே அத்தனை நேரமும் நிறுத்தி வைத்திருந்த சேட்ஜியும் சட்டென்று படியேறி உள்ளே புகுந்தார்.

205

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/198&oldid=1028216" இலிருந்து மீள்விக்கப்பட்டது