பக்கம்:ஆப்பிள் பசி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

ரயிலில் சிங்காரப் பொட்டுவும், சேட்டும் ஏறினது

சிங்காரத்தை 'இறங்கு! இறங்கு!' என்று சேட் சொன்னது, "நான் மாட்டேன்! நான் மாட்டேன்!' என்று சிங்காரம் மறுத்தது எதுவுமே சாமண்ணுவின் கவனத்தில் பதியவில்லை.

அவன் பார்வை நகரும் பிளாட்பாரத்தில் லயித்திருந்தது. தூரத்தில் தெரிந்த நுழைவாயில் மீதும், மாடிப்படிகள் மீதும் அலைந்தது. இந்தக் கடைசி நேரத்தில் கூட மனத்தில் அந்த ஆசை துளிர்த்திருந்தது. அவள் வரமாட்டாளா?

ஆமாம்; சுபத்ரா அவசரமாக அந்த வாயில் வழியாக ஒடி வந்து, அவனைப் பார்த்துக் கையை ஆட்டுவாள் என்று எதிர் பார்த்தான். அப்படி நடக்காதா என்று ஏங்கினன். அந்த ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப மனத்திரையில் பார்த்துக் கொண்டே சென்னை வரை போய் விடலாம்; அந்த இனிய நினைவில் உடல் உபாதையோ, மன வேதனையோ மறந்து போகும் என்று எண்ணிஞன்.

ஊருக்குப் போன பின்னர் சுபத்ராவை, அவள் நினைவை மனத்தில் பூஜித்து, ஒர் இழந்த காதலின் இன்பமான சோகத்தை வாழ்க்கை முழுதும் அனுபவித்துக் கொண்டிருக்க லாம். மனத்தின் இடையருத பொழுதுபோக்காக அது இருந்து கொண்டிருக்கும். -

பிளாட்பாரம் விரைவாக நகர்ந்தது. வாசல் மறைந்தது. மேலே கூரை மறைந்தது. ஜனங்கள் பின்தங்கிஞர்கள். பரந்த வெளி தோன்றி அதன் பர்ப்புகளில் தண்டவாளப் பின்னல் தெரிந்தது. அதை அடுத்து கல்கத்தாவின் வானம் நீலமாகத் 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/199&oldid=1028218" இலிருந்து மீள்விக்கப்பட்டது