பக்கம்:ஆப்பிள் பசி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சரி; ரயில் நகர்ந்துட்டுது. இப்போ எப்படி இறங்கு வீங்க?' என்று சாமண்ணு கேட்கும்போதே வண்டியின் வேகம் குறைந்தது. -

அவுட்டரில் அது அனுமதிக்காகத் தங்க, "வா சிங்காரம். இப்ப இறங்கிடுவோம்!” என்ருர் சேட். -

வண்டிக்குள்ளிருந்த துணை நடிகன் ராமசாமி சேட்டின் கைகளைப் பற்றி மெள்ள இறக்கிஞன். சிங்காரம் 'பொத்' தென்று குதித்தான். - சேட் அப்படியே எம்பி ராமசாமியைப் பார்த்தார். 'தம்பி! ஐயாவை ஜாக்கிரதையாகக் கொண்டு போய் ஊரிலே சேர்த் துடு! தூங்கிடாதே! ஜாக்கிரதை. கூடையிலே பழம், ஸ்வீட் ரசகோலா எல்லாம் வெச்சிருக்கேன். வால்டேர்ல சாப்பாடு வாங்கிக் கொடு. நீயும் சாப்பிடு. அப்புறம் ஊர்ல ரெண்டு நாள் தங்கியிருந்துட்டு அவர் போன்னு சொன்னப்புறம் புறப்பட்டு வா. வரபோது தேவராஜ முதலி தெருவிலேர்ந்து ஜாலர் துணியும், காகித மல்லியும் மறந்துடாமே வாங்கிட்டு வா' என்று சேட்ஜி குரலை உயர்த்திச் சொன்ஞர்.

வார்த்தைகள் வெளிக்காற்றில் பறந்து போயின.

- இரண்டு இரவுகளும் ஒரு பகலும் பிரயாணம் செய்த அலுப்பும் களைப்பும் சாமண்ணுவின் முகத்தில் தெரிந்தன. ஒரு வார்த்தை பேசவில்லை. சுபத்ராவின் நினைவுச் சுழலில் சிக்கி ஒரு உன்மத்த நிலையிலிருந்தாள். -

உலகம் முழுவதும் இப்போது அன்னியமாகத் தோன்றி. யது அவனுக்கு வழியில் குறுக்கிட்ட ஆறுகள், வயல்கள், ஸ்டேஷன்கள் யாவும் வெறும் சூன்யங்கள்ாகத் தோன்றின.

- இரண்டாம் நாள் காலையில் ஆந்திரத்து ஊர்கள் வரிசையாக வநதன.

'இன்ன் சாயங்காலம் ஆயிடுமோ ஊர் போய்ச் சேர' என்று யோசித்தான். -

மாலையில் ஊரில் அடையாளங்கள் வந்தவுடன் ஒரு கனவி லிருந்து உண்மைக்கு வருவதுபோல் இருந்தது.

சட்டென்று கால்களைத் தூக்கிக் கீழே போட, அப்போது தோன்றிய வலி அவனது உண்மைக் கோலத்தை விளக்கிற்று. அவன் ஊனம்! - "ஐயா, மெதுவாக!' என்ருன் ராமசாமி. சாமண்ணு அவன் தோளில் படிந்து கொண்டான். ஒற்றைக் காலைத் தாவித் தாவிக் கதவருகில் வந்தான்.

அவனை மெதுவாகப் பிடித்து உட்கார வைத்து இறக்கினன் ராமசாமி. - - - இதற்குள் வண்டி நகர்ந்து வேகம் பிடிக்கவே, 'இந்தாங்க, இதை மறந்துட்டீங்களே' என்று ஒரு குரல் வண்டியிலிருந்து கேட்டது. * + -

208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/201&oldid=1028221" இலிருந்து மீள்விக்கப்பட்டது