பக்கம்:ஆப்பிள் பசி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் வகுப்பிலிருந்த ஒருவர் வெளியே எட்டி அவனது 'க்ரச்' இரண்டையும் எடுத்துப் போட்டார்.

வண்டி பளிச்சென்று விலகிப் போய்விட, அதுவரை தொடர்ந்த ஒரு துணையான ஜனக் கூட்டமே தன்னைத் தனிமை யாக்கிவிட்டது போன்ற உணர்வுடன் ஸ்டேஷனைப் பார்த்தான். வெறிச்சென்றிருந்தது. கிராதி வேலி நெடுந்துரம் போய் ஒரு வெறுமையை வளைத்துக் கொண்டிருந்தது. சற்று எட்டத் தில் அவன் இரண்டு 'க்ரச்'களும் அலங்கோலமாய்க் கிடந்தன. 'யார் யாருக்கோ தந்தி கொடுத்திருக்கிறேன் என்று சேட் கூறினரே! ஒருவரையுமே காணுேமே! சாமூ! இதுதான் வாழ்க்கையின் அப்பட்டம்' என்று ஒரு குரல் ஒலித்தது. திடுக் கிட்டுத் திரும்பிப் பார்த்தான். யாருமில்லை.

பிளாட்பாரத்தில் சேட் கொடுத்திருந்த பழக் கூடை கவிழ்ந் திருந்தது. அதன் மீது சுற்றிக் கட்டியிருந்த கோணி கிழிந்து இரண்டொரு ஆப்பிள் வெளியே விழுந்திருந்தது.

அவற்றில் ஒரு ஆப்பிளைக் கையில் எடுத்தான். அதில் சுபத்ராவின் முகம் தெரிந்தது. -

பற்களால் அதைக் கடித்துச் சுவைத்தான். சட்டென்று நிறுத்தினன். ஸ்டேஷனையும் சுற்றுப்புறத்தையும் பார்த்தான். மறுகணம் 'து தூ' என்று துப்பினன்.

கையிலிருந்த அந்த ஆப்பிளை அப்படியே தண்டவாளத்தில் எறிந்தான்.

'பசிக்கு ஆப்பிள் சாப்பிடலாமா? அதுவும் இனிமே மனம் முனகியது.

'ராமசாமி!' 'என்ன ஐயா?” 'போலாம்.' 'சரி ஐயா!' ராமசாமி க்ரச்சை எடுத்துக் கொடுக்க, சாமண்ணு தன்னைத் தாங்கிக் கொண்டு மெதுவாக நடந்தான். ஒவ்வொரு அடிக் கும் உலகம் எம்பி எம்பி விழுந்தது. ஸ்டேஷன் வெளியே ஜட்கா ஒன்று காத்திருந்தது. வண்டிக்காரன் சாமண்ணுவை ஏற இறங்கப் பார்த்தான்.

'என்ன அப்படிப் பார்க்கிறே? நான்தான் நாடக நடிகன் சாமண்ணு' என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.

'ஹஅம்! நாட்கத்தை அவன் எங்கே பார்த்திருக்கப் போகி ருன்! என்றது இன்னொரு மனம்.

"எங்க்ே ப்ேர்கனும்ங்க?" 'கோட்டை மைதானத்துக்கு அடுத்த அஞ்சு ராந்தல் தெரு வுக்குப் போ!' -"

"ஒரு ரூபாய் கொடுங்க'.வண்டியைத் தாழ்த்தி சாமண்ணு வை ஏற வைத்தான் வண்டிக்காரன்.

209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/202&oldid=1028223" இலிருந்து மீள்விக்கப்பட்டது