பக்கம்:ஆப்பிள் பசி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த அச்சச்சோ பெண் எதிரில் நின்ருள். 'அச்சச்சோ! நீங்க வந்துட்டேளா! லைட் எரிஞ்சதுன்னு பார்த்தேன். எப்போ வந்தேள் ? இத்தனை நாளா எங்கே போயிருந்தேள்? நான் ரொம்பப் பயந்து போய்ட்டேன் மாமா!' என்ருள்.

அந்த நேரத்தில் அவள் பேச்சு எவ்வளவு பெரிய ஆறுதலைத் தந்தது! சாமண்ணுவின் மனசில் சோகமான இன்பம் பொங்கி யது.

'ஏன் பயந்தே?' 'ரொம்ப நாளாக் காணல்லையா? உங்களை ஜெயில்லே போட்டுட்டாளோன்னு நினைச்சேன்.”

'என்னையா, எதுக்கு?' 'எங்க அப்பாவைக் கொலை செஞ்சீங்கன்னு போலீஸ்காரா உங்களைப் பிடிச்சுண்டு போன இல்லையா?”

"ஆமாம்!' 'அதுக்காக உங்களை ஜெயில்லே போட்டுட்டாளோன்னு நினைச்சேன். இன்ஸ்பெக்டர் முனகலா மாமாவைப் பார்த்து நானே சொல்லணும்னு நினைச்சேன்!”

'என்ன சொல்ல நினைச்சே?” - 'சாமண்ணு மாமாவை விட்டுடுங்க! எங்க அப்பாவை அவர் கொலை செய்யலை. அது வேறே மாமான்னு சொல்ல ணும்னு நினைச்சேன்.'

சாமண்ணு நிமிர்ந்து பார்த்தான். சற்று அதிர்ந்தான். 'யார் அந்த வேற மாமா ?” 'காதர் பாட்சா மாமா!' 'யார்? அந்த ஆர்மோனியக்காரன?” 'மாமா! அவன்தான் விறகுக் கட்டையாலே எங்க அப்பா தலையிலே அடிச்சுக் கொன்னுட்டான்.'

'நீ பார்த்தியா?’’ . சாமண்ணு ஆச்சரியத்தோடு கைகளை ஊன்றி இன்னும் நிமிர்ந்தான்.

"ஆமாம், நான் அப்ப பாத்ரூம்ல இருந்தேன்.' 'நிஜம்மா ?” - 'நிஜம்மாத்தான்! அந்தக் கடன்காரனைக் கண்டதும் பயந்து போயிட்டேன். கட்டையாலே அடிச்சு, அந்தக் கட்டையைக் கொண்டு போய் புழைக்கடை ஒலைக் கூரையிலே சொருகிட்டு ஒடிட்டான். கண்ணுலே நான் பார்த்தேன்.'

'அப்போ நீ ஏன் இதை அன்னிக்கே சொல்லலே!' 'என்னை யாரும் கேட்கலையே மாமா? கேட்டிருந்தா சொல்லி யிருப்பேன்!'

தாவணி கட்டிய அவள் துக்கம் காட்டியது வயசுக்கு மீறி இருந்தது. -

2 1 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/204&oldid=1028226" இலிருந்து மீள்விக்கப்பட்டது