பக்கம்:ஆப்பிள் பசி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளவு அழகும், புகழ்பெற்ற நட்சத்திரம் தன்னைக் கண்டு மோகித்தது ஒரு கிளுகிளுப்பை உண்டாக்கியது.

அதே சமயம் மல்லிகை ஒடையின் நினைவுகளும் மனத்தில் பூத்தன. ஆல்ை... சுபத்ராவின் அழகுக்கு முன் சகுந்தலா எங்கே?

சகுந்தலா கல்கத்தா வந்தபோது அவள் மீது மனம் நாடவில்லை. சுபத்ராவின் போதையில் மூழ்கியிருந்தவனுக்கு சகுந்தலா துச்சமாய்த் தோன்றிள்ை.

காலும் மனமும் ஊனமாகி, கேட்பாரற்ற நிலையில் அைைத யாகி ஊர் திரும்பியிருக்கிருன்.

'என்னை யாருமே திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்களா? நான் இறந்தாலும் அழுவதற்கு ஆள் கிடையாதா? நானேதான் அழ வேண்டுமா? நானேதான் கொள்ளி போட்டுக் கொள்ள வேண்டுமா?’’ - ' -

அதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது துக்கம் பீறிட்டது. சுய அனுதாபம் தோன்றி சகுந்தலா வரலாம் என்று. நெஞ்சின் அடிவாரத்தில் தேசலாய் ஓர் ஆசை பிறந்தது. அதுவும் இப்போது மறைந்து விட்டது.

அவள் மனத்தை எவ்வளவு துவைத்து விட்டேன்! என் அலட்சியம் அவளை எத்தனை வேதனைக்குள்ளாக்கியிருக்கும்!

பகல் தூக்கம் தூங்கிய பிறகு கட்டிலில் எழுந்து உட் கார்ந்த போது ஆறு மணி ஆகியிருந்தது.

சாமு என்று ஒரு குரல்! மெலிதான ஒரு குரல் கேட்டது. பழக்கமான குரல்! உடம்பில் பர்வசம்! -

ஜன்னலில் ஒரு நிழல் தெரிய, "யாரு?" என்று கட்டிலில் இருந்தவாறே கேட்டான்.

'யாரு உள்ளே வாங்க!' என்ருன். 'நான்தான் சாமு! கோமளம் வந்திருக்கேன்.' "யாரு? வக்கீல் மாமியா?” 'அட்ேடே' என்று தன்னை மறந்து எழுந்திருக்க, கால் ஒரு போடு போட்டது. -

'பல்லைக் கடித்து வேதனையை அமுக்கிக் கொண்டு, "வாங்கோ மாமி உள்ளே வாங்கோ' என்று உபசாரக் குரலில் அழ்ைத்தான். - - -

'இருக்கட்டும் சாமு! நான் இங்கேயே நிற்கிறேன். உள்ளே வர்றதுக்கு இல்லை' என்ருள். கோமளம்.

சாமண்ணு யோசித்தான். 'அந்த மூன்று நாட்களாக இருக் குமோ! சீ! அந்த நாட்களில்'மாமி வீட்டை விட்டு வெளியே இறங்க மாட்டாளே? *

ஆண் பிள்ளை தனியாக இருக்கும் வீட்டுக்குள் வரத் தயங்கு கிருளோ? க்ரச்சை எடுத்துக் கீழே வைத்தான். வலி இன்னும்

213

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/206&oldid=1028229" இலிருந்து மீள்விக்கப்பட்டது