பக்கம்:ஆப்பிள் பசி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீரவில்லை. காலைத் தூக்கி வைக்க முடியவில்லை.

"கொஞ்சம் இருங்கோ மாமி! நானே வர்றேன்!” என்ருன் அவன். -

‘'வேண்டாம் சாமு, வேண்டாம்! நீ இங்கே வராதே! அங்கேயே இரு காரணமாகத்தான் சொல்றேன். நானும் உள்ளே வர்றதுக்கு இல்லை!' என்ருள்.

சாமண்ணுவின் திகைப்பு அடங்கவில்லை. தயங்கியபடியே கட்டிலில் அமர்ந்து கொண்டான். -

'செளக்கியமா வந்து சேர்ந்தியா? எல்லாம் கேள்விப்பட் டேன்! நாட்டைக் கலக்கிண்டு வருவேன்னு நினைச்சேன். உன் புகழ் ஊர் உலகமெல்லாம் பரவற நேரத்திலே, கடவுள் உன்னைச் சிறகொடிந்த பறவையாக்கிக் கூண்டிலே அடைச்சுப் போட்டுட்டாரே! அந்தக் கடவுளுக்குக் கண் இல்லை. சாமு!' என்று கேவி அழுதுவிட்டாள் மாமி.

"கடவுள் மேலே பழி போடாதீங்க. நம்ப தலை எழுத்து அப் படி! மாமா செளக்கியமா இருக்காரா?' என்ருன்.

கோமளத்திடமிருந்து பதில் வரவில்லை. - -> மாமி விசிக்கும் சத்தம் கேட்டு, 'ஏன் மாமி அழlங்க? அழாதீங்க. என் கால் போனதுக்கா?”

'மாமி, மாமி!' ... • - . . . . - 'இங்கேதான் இருக்கேன்!” என்று கம்மிய குரலில் பேசினுள் மாமி. -

'என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா உங்களுக்கு?' 'எனக்கென்ன? சரியாத்தான் இருக்கேன்.” 'நானே ஆத்துக்கு வந்திருப்பேன் மாமாவைப் பார்க்க! மனசே சரியில்லை! யாரையும் நானே வந்து பார்க்கிற அளவுக்கு ஆண்டவன் என்னை விட்டு வைக்கலை. ஊனப்படுத் திட்டான்.' . . . . . .

"இல்லை சாமு! நீ வந்திருக்கேன்னு தெரிஞ்சா மாமா சும்மா இருப்பாரா? அவரே வந்திருப்பாரே...' என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறிஞள் கோமளம்.

'மாமா ஊரிலே இல்லையா?” - மீண்டும் விசிப்பு.

to o

அழாதீங்க மாமி! விஷயத்தைச் சொல்லுங்க.' "அவர் இந்த உலகத்திலேயே இல்லை சாமு. நான் கொடுத்து வெச்சது அவ்வளவுதான். குர்ல் உடைந்து கூறிள்ை.

'என்ன மாமி?' - 'மாமா போயிட்டார் சாமு!” "ஐயோ, நிஜமாவா? எப்ப் மாமி?” - - . கோமளம் ப்ேசவில்லை. அவள் அடங்குவதற்குக் காத்திருந் தான. . . .

214

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/207&oldid=1028230" இலிருந்து மீள்விக்கப்பட்டது