பக்கம்:ஆப்பிள் பசி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லும், தன்னைத்தானே அழிச்சுக்கிற சுபாவம் அவனைச் சூழ்ந் துடும். அடேயப்பா கல்கத்தாவிலே என்ன ஆட்டம் ஆடிய்ை! டாக்டரை விசாரிச்சியா? சகுந்தலாவைச் சரியானபடி கவனிச் சியா? சிங்காரப் பொட்டுவைத்தான் நல்ல முறையில் நடத்தி னயா? அகங்காரம், பணத் திமிர், புகழ்ச் செருக்கு உன் கண் களை மறைத்துவிட்டன!

சுபத்ரா மீது கொண்ட மோகத்தில் அப்படித் தலை கால் தெரியாமக் கிடந்தியே! சுவர்க்கமே கிடைச்சுட்ட மாதிரி இறு மாந்தியே! அப்ப சகுந்தலா கிள்ளுக் கீரையாத் தோணினளே! அத்தனையும் என்னுச்சு? சொப்பனம் போல எல்லாம் போயிட லையா? வாழ்க்கையை முறிச்சுகிட்டியே! இன்னும் குறை நாளை எப்படி வாழப் போறே? யார் உனக்கு என்ன செய்துடப் போரு? . . " r

'அம்மா' என்று திடீரென்று பொங்கி வந்த துக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். உள் குரல் தீனமாக ஒலித்தது. 'அம்மா! உன் சொல்லைக் கேட்காமல் ஆட்டம் போட்டேன். தப்புதான். இறுமாப்பில் எல்லாரையும் உதாசீனப்படுத்தி னேன். குற்றம்தான். இப்ப அதையெல்லாம் நினைச்சு துக்கப் படுகிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் இது என் பதை உணர்கிறேன். சோற்றுப் பசி வந்தா நல்லது. எனக்கு ஆப்பிள் பசி வந்துட்டுது. அதுக்காக மேலே உச்சத்துக்குப். போய் டமால்னு விழுந்துட்டேன். கால் மட்டும் இல்லை, வாழ்க்கையே ஊனமாயிட்டுது. என்ன செய்யப் போறேம்மா?" கந்தப்பன் பிடிவாமாய் காப்பியும் இட்லியும் எதிரில் வைத்து சாப்பிடச் சொன்னன். - * - - -

சாமண்ணுவின் கண்களில் கண்ணிர் அருவி போல் கொட்டியது. இயந்திரம் போல இட்லிகளை விழுங்கினன். காப்பியைக் குடித்தான். - --- - மத்தியானம், 'மாமா' என்று குரல் கேட்டு வாசல் பக்கம் பார்த்தபோது அச்சச்சோ லல்லு வந்திருந்தாள்.

"இந்தாங்கோ! கடிதாசி!' என்ருள். 'ஏது?’ என்ருன் சாமண்ணு. - "வக்கீலாத்து மாமி தந்தா ஊருக்குப் புறப்பட்டுப் போரு ளோன்னே! உங்களுக்குச் சொல்லிக்கிரு.' -

"இட்லி சாப்பிடறியா லல்லு!” என்று கேட்டான். "வேண்டாம் மாமா! கல்யாண வீட்லே இப்பத்தான் சாப் பிட்டுட்டு வரேன்.” . -

"கல்யாண வீடா? யாருக்குக் கல்யாணம்?' - "சகுந்தலாவுக்குத்தான். மர்ப்பிள்ளை ரொம்ப அழகாயிருக் கான் மாமா, சகுந்தலா கொடுத்து வெச்சவள்!'

'சொரேர்' என்றது சாமண்ளுவுக்கு. மெளனமாக அந்தச் செய்தியை இட்லித் துண்டோடு சேர்த்து விழுங்கினன். அப்புறம் கடிதத்தைப் பிரித்தான். - - - 222

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/215&oldid=1028238" இலிருந்து மீள்விக்கப்பட்டது