பக்கம்:ஆப்பிள் பசி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள சாமு, - உன் விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து எனக்குத் துக்கம் பொங்கி வருகிறது. இந்தச் சமயத்தில் எங்க ஆத்துக்காரர் இல்லாமல் பேர்னர். * - - -

நான் உன்கிட்டே பேசினப்போ ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அதை நான் மறக்கலாமோ? எவ்வளவு பெரிய தப்பு ! நம்ப பாப்பா பற்றித்தான். ஊருக்குப் போயிருக்கா அவள். நாளை காலையிலே வந்துடுவாள். நீ வந்திருக்கிறதோ, உனக்கு நடந்திருக்கிறதோ அவளுக்கு எதுவும் தெரியாது. நான் கடிதாசியிலே எழுதி அவளுக்குக் கொடுத்தனுப்பியிருக்கேன். இந்த ஊர்லேருந்து புறப்பட்டபோது உன்னே வழி அனுப்ப ஸ்டேஷனுக்கு அவள் ஓடி வந்து பார்த்தாளாம்! வண்டி புறப் பட்டுடுத்தாம். அப்புறம் கல்கத்தாவுக்கே வந்து உன்னைப் பார்க்கணும்னு துடிச்சிண்டிருந்தா ஆன சந்தர்ப்பமே இல்லாமல் போயிட்டுது. நீ போனதிலிருந்து எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து உன்னைப் பற்றி விசாரிச்சுண்டே இருந்தாள்.

அந்தப் பெண் வேற குலத்திலே பிறந்துட்டுதே தவிர, அதைப் போல நல்ல பெண்ணை உலகத்திலே பார்க்க முடியாது. ஞாபகம் வச்சுக்க, நீ ரெண்டாம் முறை நாடக சபை ஏற் படுத்தினியே, அது யார் பணம்னு நினைச்சே? எங்காத்து மாமா வும் மத்தவாளும் சேர்ந்து பணம் போட்டிருக்கான்னுதானே? இல்லை. உண்மையில எல்லாப் பணமும் பாப்பாதான் போட் டிருக்கா! உன்னை எப்படியும் முன்னுக்குக் கொண்டு நிறுத் தணும்னு அவளுக்கு அத்தனை ஆர்வம். எங்கேயோ பிறந்து எங்கேயோ தப்பிதமா ஒருமுறை திருமணமும் நடந்து போச்சு!. ஆனாலும் உன்னை அவள் மறக்கவேயில்லை. சதா உன் நினைவு தான். எனக்குத் தாலி கட்டாத கணவர் அவர்தான்னு உன்னைப் பற்றி அடிக்கடி சொல்லிண்டிருக்கா.

('வாழ்நாள் முழுக்க ஒருத்தி ஒருவளுேடு வாழனுங்கற தெல்லாம் இப்ப இல்லை. காலம் மாறிப் போச்சு. ஒருவனைப் பிரிஞ்சப்புறம் இன்னொருவனுடன் வாழறதிலே தப்பில்லேன்னு ஆயிட்டுது.ஒருவனைவிடாம இன்ைெருவனுடன் வாழறதுதான் தப்பு. ஒரு பெண் எப்போது எவைேட வாழருளோ அப்போது அவனுக்குத் துரோகம் செய்யாமலிருந்தாப் போதும். அது தான் கற்புன்னு ஏதோ ஒரு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். எனக்கு அந்தக் கருத்து புடிச்சிருக்கு. நான் அப்படித்தான் வாழப் போறேன்! அப்படி இன்னெருத்தனுடன் வாழறதுன்னு தீர்மானிச்சா அந்த இன்னெருத்தர் நீங்களாத்தான் இருப் பீங்க...' 3. -

பாப்பா எப்போதோ சொன்ன இந்த வார்த்தைகள் அவன் காதில் இப்போது ரீங்கரித்தது...).

223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/216&oldid=1028239" இலிருந்து மீள்விக்கப்பட்டது