பக்கம்:ஆப்பிள் பசி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தியானம் மாசிலாமணி குடையோடு வந்தார். அவர்தான் அந்த வீட்டை சாமண்ணுவுக்கு முடித்துக் கொடுத்தது. கல்கத் தாவுக்குப் போகுமுன் கொஞ்சம் முன்பணம் கொடுத்திருந் தான். இரண்டு மாசத்தில் மீதியைத் தருவதாக ஒப்பந்தம். இப்போது மூன்று மாதங்கள் ஓடி விட்டன. -

மாசிலாமணி வந்தபோது,'மன்னிக்கணும். இந்த வெயிலில் உங்களை வரச் சொன்னதுக்கு' என்ருன் சாமண்ணு.

'என்ன அப்படிச் சொல்றிங்க? நீங்க எவ்வளவு பெரிய நடிகர்! எவ்வளவு புகழ்! இப்ப கால் போயிட்டுது. அதலை ஊரோடு வந்து சேர்ந்துட்டீங்க. நீங்க நல்ல நிலையிலே இருக்கறப்போ ஆயிரம் பேர் வருவாங்க. இப்ப திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாங்க. இதுதான் உலகம். வாழ்வும் தாழ்வும் மனுஷங்களுக்கு சகஜம்.அதை மறக்கக் கூடாது. அப்படிச் சில பேர்தான் இருப்பாங்க. இப்ப அந்த நிலையிலும் உங்களைத் தேடி வர்றவங்கதர்ன் உங்ககிட்ட உண்மையான அக்கறை உள்ளவங்க. இது புரிஞ்சாப் போதும்' என்று மாசிலாமணி கூறியபோது,சகமண்ணுவுக்குப் பாப்பாவின் நினைவு தோன்றி 'சொர்ேர்' என்றது. கண் கலங்கினன். -

'முதலியார் தநாளேக்கு நான் ஊருக்குப் புறப்படறேன். இப்ப எதுக்குக் கூப்பிட்டேன்ஞ - நீங்க என்ன செய்வீங் களோ தெரியாது. முழு வீட்டையும் எழுதி வாங்கிக்குங்க. எனக்கு இப்பப் பணம் தேவைப்படுது. நான் கொடுத்த 'அட் வான்ஸ் மூவாயிரத்தையும் திருப்பித் தந்துட்டாப் போதும். நீங்கதான்.அதுக்கு ஏற்பாடு செய்யணும்' என்ருன் சாமண்ணு.

'ஊருக்கா? எந்த ஊருக்குப் போlங்க?' 'சொந்த ஊருக்குத்தான். பூர்விகம். எங்க அம்மா பிறந்து வளர்ந்த ஊர்! என் ஆயுசு வரை இருக்க அது இடம் கொடுக் கும். கையில் இருக்கிற சொற்பப் பணத்தை பாங்கிலே போட்டு வச்சா அந்த வட்டியிலே என் கர்லம் ஓடிடும்! போதும்; கடவுளே எப்பவும் மறக்காமல் இருக்க அவரே வழிசொல்லிக் கொடுத்து இப்ப்ோ நேரமும் அமைச்ச்க் கொடுத்துட்டார்!’

'கவலைப்படாதீங்க! நாளைக்குப் பணத்தோடு உங்களை வந்து பார்க்கிறேன். ஒருநாள் டயம் கொடுங்க' என்று செரில்லிவிட்டுப் புறப்பட்டார் மாசிலாமணி.

மறுநாள் விடியும் போதே மேகத் திரளோடு இருந்தது. பகல் மந்தமாக இருந்தது. - - -

சாமண்ணு கந்தப்பனை அழைத்துத் தன் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னன்.

கந்தப்பன் தயங்கினன்."என்ன யோசனை பண்றே? சாமான் களை எடுத்து வை' என்ருன் சாமண்ணு.

'ரெண்டு நாள் கழிச்சுப் புறப்படலாங்க, பரணி கிருத்திகை

227

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/220&oldid=1028244" இலிருந்து மீள்விக்கப்பட்டது