பக்கம்:ஆப்பிள் பசி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

IDTட்டு வண்டியில் அமர்ந்திருந்த சாமண்ணு மீண்டும் வெளியே பார்த்தான். 'பாப்பா!' என்று வாய்விட்டுக் கூவி ஞன். வானத்தில் மேகங்கள் மத்தியில் அவள் முகம் அந்தர மாகத் தெரிந்தது. .

'பாப்பா! உன்னுடைய தியாகம், அன்பு, பாசம் எல்லாம் இப்போதுதான் தெரிகிறது. நீ சாதாரண மனுவி அல்ல; தெய்வத்துக்குச் சமமானவள். உன்னை நான் பெரும் துன்பத் தில் ஆழ்த்திவிட்டேன். இனி ஒருபோதும் என்னல் உனக்குச் சங்கடம் இராது. நான் உனக்கு இழைத்த குற்றங்களுக்கெல் லாம் ஆண்டவன் என்னைத் தண்டித்துவிட்டான். நீ ஓடி வருவாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் உனக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஒருவேளை என் கால் சரியாக இருந்தால் உன்னை நானே வந்து பார்த்தாலும் பார்த் திருப்பேன். ஆனல் இப்போது இந்த நிலையில் வரவே மாட் டேன். என்னுடைய அகம்பாவத்துக்குக் கிடைத்த பரிசு இது. உன்னைப் பார்க்கவே வெட்கப்படுகிறேன். - - -

பாப்பா, என் இஷ்டப்படி உயர உயரப் பறக்கலாம் என்று இறுமாப்புடன் வாழ்ந்தேன். கடவுள் என்னைப் பாதாளத்தில் வீழ்த்திவிட்டார். நான் இந்த கதிக்கு ஆளாவேன் என்று கனவி லும் நினைக்கவில்லை. இப்போது என் கிராமத்திற்கே போகி றேன். உன்னைப் பார்க்கக் கூட எனக்குத் தைரியமில்லை. நான் உனக்கு இனி எவ்விதத்திலும் பொருத்தமில்லாதவன். என்னை

மன்னித்து விடு.” - - ...” “.... . . .

2等五

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/224&oldid=1028247" இலிருந்து மீள்விக்கப்பட்டது