பக்கம்:ஆப்பிள் பசி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்துக்குத்தானே புறப்பட்டேன்? இப்போது இங்கே எப்படி வந்தேன்! இது யார் வீடு'

நிதானமாக அறை முழுதும் பார்த்தான். வெளிச்சம் முன்னைக் காட்டிலும் கூடியிருந்தது. அறை புதிது, இடம் புதிது. அவன் மீது உள்ள ஆடை புதிது! போர்வை புதிது!

அறைக்குள் யாரோ வரும் நிழல் தெரிந்தது. அந்த உருவத்தை வியப்போடு பார்த்தான். அடி வயிற்றில் ஒரு அதிர்ச்சி! வாய் அவனையறியாமல், 'பாப்பா' என்று அழைக்கிறது. ஆனல் சத்தம் வரவில்லை.

பிரமித்துப் பார்க்கிருன். மலங்க மலங்க விழிக்கிருன்.

'யா و « و

ಸಿ-9-5 இப்போது ஒரு கம்பீர யெளவனம் வந்திருந் தது. அமைதியாக, அடக்கமாக, அன்பின் உருவமாக நின்ருள்.

"பாப்பா!'

உணர்ச்சி பரவசத்தில் அழைத்தான்.

மந்தகாசமாக முறுவலித்தாள்.

'இந்த ஜன்மமா, அடுத்த ஜன்மமா? w

வண்டியிலும், மழையிலும் அவன் ஜன்மம்முடிந்துவிட்டதா? அதன் பிறகு எப்படி இதைப் போன்ற ஒரு அமைதியான காட்சி எழுந்தது?

"பாப்பா!'

அவள் இன்னும் அருகில் வந்தாள்.

'நீதான?' .

ஆமாம்....

'இங்கே எப்படி வந்தேன்?'

'உங்க வண்டி மழையிலே தடம் மாறிக் குடை சாஞ்சிட டுது. நீங்க பள்ளத்திலே கிடந்து உயிருக்குப் போராடிக்கிட் டிருந்தீங்க., நல்லவேளை! அந்தச் சமயம் எங்க அப்பா அந்த வழியா. வந்திருக்காரு. அவர் மட்டும் பார்த்திராட்டா, நீங்க இந்நேரம் உயிரோடு இருக்க மாட்டீங்க!”

'இது.... இது.....'

'இது எங்க வீடுதான்!”

'இங்கே வந்துட்டன?”

'ஆமாம்!'

'நான் எங்க ஊருக்குப் போகலையா?”

'இனிமே உங்க ஊர், வீடு எல்லாமே இதுதான்!”

'என்ன சொல்றே?’’

'இனி, நீங்க இங்கேதான் இருக்கப் போlங்க. நான் உங்களைத் தனியா விடப் போறதில்லை' என்ருள் பாப்பா.

ச மண்ணுவுக்கு அந்தக் குரலும், அதன் இதமும், தாய்க்கு நிகரான பாசமும், உயிருக்கு உயிரான நேசமும் சட்டென்று. பளிச்சிடுவதுபோல இருந்தது.

2.35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/228&oldid=1028250" இலிருந்து மீள்விக்கப்பட்டது