பக்கம்:ஆப்பிள் பசி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 “தம்பி, அப்படின்னா என்ன செய்யப் போறீங்க? டிராமாதான் இல்லையாமே. எங்களோடு பூவேலிக்கு வந்துடுங்களேன்.” பாப்பாவின் முகத்தைப் பார்த்து, “என்னம்மா, நான் சொல்றது சரிதானே?”

அவள் சர்மண்ணாவின் முகத்தைப் பார்த்தாள்.

சாமண்ணா சொன்னான்.

“நீங்க ஏதோ டிராமாவுக்கு வந்தீங்க. வந்த இடத்திலே தற்செயலா என்னைப் பார்த்தீங்க. மழைக்குத் தங்கினீங்க. சாப்பாடு போட்டீங்க. காப்பி வாங்கி வந்து கொடுத்தீங்க. இதுக்கெல்லாம் நான் ரொம்பக் கடமைப்பட்டிருக்கேன். இப்ப நான் வரலையேன்னு வருத்தப்படாதீங்க.”

“உனக்கு உடம்பு சரியில்லாதப்போ தனியா விட்டுட்டுப் போறது மனசுக்கு அவ்வளவு சமாதானமா இல்லே...! அதான் யோசிக்கறோம்.”

“பரவாயில்லைங்க. என் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமாயிட்டுது. பட்டினியும் கிடப்பேன். பாயசமும் சாப்பிடுவேன்! பெரிய பெரிய குடும்பத்துப் பெண்களெல்லாம் நாடகம் பார்க்க வருவாங்க. பார்த்துட்டு என்னைப் புகழ்ந்து பேசுவாங்க. விருந்துக்கு அழைப்பாங்க. சில பெண்கள் வலிய வந்து என்னோடு சிரிச்சுப் பேசி சிநேகமாப் பழகறதும் உண்டு. ஆனால் நாடகக் கம்பெனி அடுத்த ஊருக்குப் போயிட்டா, அத்தோடு எல்லாம் நின்னு போயிடும்.”

“எங்க சிநேகத்தையும் அந்த மாதிரி நினைச்சுராதீங்க. தொடர்ந்து இருக்கும்” என்றாள் பாப்பா.

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/23&oldid=1029340" இலிருந்து மீள்விக்கப்பட்டது