பக்கம்:ஆப்பிள் பசி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ரொம்ப சந்தோஷம். இப்ப லாட்ஜுக்குப் போய் ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம் வாங்க. இந்த நேரத்துக்கு சூடா இட்லி கிடைக்கும் மல்லியப் பூ மாதிரி” சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு புறப்படத் தயாரானான் சாமண்ணா.

வண்டி அம்பாள் லாட்ஜ் வாசலில் போய் நின்றது. வாசலில் குடுகுடுப்பைக்காரன் உடுக்கை அடித்துக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தான். “வழிவிட்டு நில்லுப்பா” என்று உள்ளே போனவர்கள் ஒரு மூலையில் இருந்த கடப்பைக் கல் டேபிளைத் தேடிச் சென்று உட்கார்ந்தார்கள். அலம்பி விட்டதால் தரையெல்லாம் ஈரம் காயாமலிருந்தது.

கல்லா மேஜைக்கு மேலே லட்சுமி, சரஸ்வதி, பாலாஜி படம். மீட்டர் பெட்டிக்கு மேல் சிகப்பு பல்ப் வெளிச்சம். எதிர் சுவரில் ஓட்டல்காரர் போட்டோ என் லார்ஜ்மெண்ட்.

மீசை வைத்த பால்காரரும் மளிகைக் கடைக்காரரும் பொங்கல், வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் கல்லா மேஜை ஓரம் காப்பிக் கூஜாவுடன் பார்சலுக்குக் காத்திருந்தாள்.

ஸில்க் ஜிப்பாவுக்குள் தங்க செயின் தெரிய ஓட்டல் ஐயர் உள்ளே வந்து கல்லாவில் அமர்ந்தார்.

மூலையில் உட்கார்ந்திருந்த சாமண்ணாவையும் அவன் பக்கத்தில் இருப்பவர்களையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே காலணா, அரையணா நாணயங்களைத் தனித் தனியாக மேஜை மீது அடுக்கி வைத்தார்.

பில் பணம் கொடுக்க சாமண்ணா எதிரில் வந்து நின்ற போது, “எட்டரையணா மூணு பேர்” என்று உள்ளிருந்தபடியே கட்டைக் குரலில் கூவினான் சர்வர்.

ஓட்டர் ஐயர், “இவாள்ளாம் யாரு?” என்று சாமண்ணாவிடம் கேட்டார்.

“நாடகம் பார்க்க வந்தாங்க. வெளியூர். மழைக்காக ராத்திரி இங்கே தங்கிட்டு இப்ப ஊருக்குப் போறாங்க.”

“இன்னிலேர்ந்து நாடகம் இல்லையாமே!”

“ஆமாம். சம்பளம் வாங்கத்தான் போய்ட்டிருக்கேன். அப்புறம் வந்து பேசறேன்” என்று அவசரமாகப் புறப்பட்டான் சாமண்ணா. ஐயர் பாப்பாவையே உற்று உற்றுப் பார்த்தார். அவர் பார்வையில் சந்தேகம் இருந்தது.

‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கேனே! எங்கே? எப்போது?’ என்று இருபது வருஷங்களுக்கு முன் தேடினார்.

“ஆமாம். அதே முகம். அதே ஜாடை! தாசி அபரஞ்சி மகளாயிருப்பாளோ?”

நாடகக் கொட்டகை வரை வண்டியிலேயே போய் இறங்கிக்கொண்ட சாமண்ணா அவர்கள் இருவரையும் ஊருக்கு

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/24&oldid=1029130" இலிருந்து மீள்விக்கப்பட்டது