பக்கம்:ஆப்பிள் பசி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 “அம்மா, நான் குளிச்சு இன்னியோடு நாப்பத்தேழு நாளாச்சு!” என்று சொல்லும்போதே அபரஞ்சியின் கண்கள் மலர்ந்து காது மடல் சிவந்து போயிற்று.

“அடிப்பாவி! அந்த மேட்டுப்பட்டி மிராசுதார் புள்ளையா வயித்துல?” என்று தாயார் நாகரத்னம் வியக்க, பதில் ஏதும் கூறாமல் கால் கட்டை விரலால் தரையைக் கீறினாள் அபரஞ்சி.

“சொல்லித் தொலையேண்டி. அந்த ஐயர் சிநேகத்தை விட்டுருன்னு எத்தனை முறை சொல்வேன்? நீயானால் பெரிய பெரிய இடங்களையெல்லாம் ஒதுக்கித் தள்ளிட்டு எந்நேரமும் அவர் நினைப்பிலேயே மிதந்துட்டிருக்கே?”

“அவருக்கென்ன குறைச்சலாம்? பெரிய மிராசுதாராச்சே?”

“ஆத்துலே வெள்ளம் புரண்டாலும் நாய் நக்கித்தாண்டி குடிக்கணும். அவர் மிராசுதாராயிருந்தா நமக்கு என்னடி ஆச்சு? பொட்டு கட்டிக்கிட்டவளுக்கு எல்லாரும் பொது தனிப்பட்ட முறையில் ஆசையை வளர்த்துக்கக் கூடாது. நம்ம குலதர்மம் அப்படி. ஒருத்தன் கூட சிநேகம் வச்சுக்கவா உனக்குக் கோயில்ல வச்சு பொட்டு கட்டினேன்.”

“மாட்டேன். நான் அவரைத் தவிர, வேற யாரையும் தொட மாட்டேன்.”

“என்னடி சொன்னே?” என்று கையை ஓங்கினாள் நாகரத்னம்.

“சரிதான், நிறுத்தும்மா! உன் மிரட்டலுக்கு நான் பயப்படப் போறதில்லே!” என்று மிஞ்சினாள் அபரஞ்சி.

“என்னடி ரொம்பத்தான் பேசறே! கத்த வித்தையெல்லாம்

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/36&oldid=1029347" இலிருந்து மீள்விக்கப்பட்டது