பக்கம்:ஆப்பிள் பசி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெத்த தாய் கிட்ட காட்டறயா?”

“பெத்த தாயாவா நடந்துக்கற நீ? பொட்டு கட்டித் தொலச்சாச்சு. தாசி குலம்னு முத்திரை குத்தி வாசல்ல பலகை மாட்டாத குறைதான். எனக்கு இந்த அசிங்க வாழ்க்கை பிடிக்கல. பல பேருக்கு உடம்பைக் கொடுத்துட்டு பட்டும் பகட்டுமா காசு மாலையைச் சாத்திக்க மனசு இடம் தரலே.”

“ஒருத்தனோட குடும்பம் நடத்தறதுக்காக ஆண்டவன் நம்மைப் படைக்கலடீ! பல பேருக்குச் சந்தோஷம் கொடுக்கற பிறவிகள் நாம். மேட்டுப்பட்டி ஐயரோட மட்டும் நீ சிநேகமா இருக்கிறதால என்ன லாபம்? ஊரும், உலகமும் உன்னை உத்தமின்னு பேசிடப் போகுதா? தாசிங்கிற பேரு மாறிடப் போகுதா?”

“எனக்கு உலகைப் பத்திக் கவலையில்லே. அது எப்பவும் என்ன வேணாலும் பேசிட்டுத்தான் இருக்கும். இந்த அவலங் கெட்ட வாழ்க்கை எனக்குப் பிடிக்கலைன்னா என்னை விட்டுடு. நீ சம்பாதிச்ச சொத்தை நீயே வச்சுக்க. எனக்கு வேணாம் அது. உனக்கு இந்த எச்சில் வாழ்க்கை பிடிச்சிருக்கலாம். மணம் வீசலாம். ஆனால் எனக்குப் பிடிக்கல்லே. உடம்பெல்லாம் முள் குத்தற மாதிரி இருக்கு.”

வாசலில் தாழம்பூ மணம் வீசியது.

நிமிர்ந்து பார்த்தாள் நாகரத்னம்.

குமாரசாமி கையில் தாழம்பூவோடு வந்து கொண்டிருந்தான்.

“வா, குமாரசாமி! என்ன விசேஷம் இன்னைக்கு? ஏது தாழம்பூ?” என நாகரத்னம் கேட்க, “பாப்பாவுக்குத் தலை பின்னி விடற நேரமாச்சே. அதுக்குப் பிடிக்குமேன்னு ஏரிக்கரைப் புதர்லேர்ந்து வெட்டி வந்தேன்.”

“பாவம், உனக்குத்தான் இந்தக் குடும்பத்து மேலே எத்தனை அக்கறை?” என்று சூள் கொட்டினாள் நாகரத்னம்.

“அது சரி, அம்மாவுக்கும் பொண்ணுக்கும் என்ன தர்க்கம்”

“எப்பவும் உள்ளதுதான். அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலையாம். மிராசு ஐயரோடதான் வாழப் போறாளாம். குமாரசாமி! நீ இப்பவே ஐயர்கிட்டே போய் அபரஞ்சி முளுகாம இருக்காங்கற செய்தியைச் சொல்லிட்டு வா.”

“சொல்றேன் அபரஞ்சி. ஆனா இப்ப அதுக்கு நேரம் சரியில்லே. ஐயாவோட சம்சாரம் உடம்புக்கு முடியாமப் படுத்திருக்காங்க, பாவம், நாலு நாளா நல்ல காய்ச்சல்! வண்டி அனுப்பி வைத்தியரைக் கூட்டியாரச் சொன்னாங்க. நான்தான் போய்க் கூட்டி வந்தேன். ஜன்னி மாத்திரை தேய்ச்சுக் கொடுத்திருக்காரு வைத்தியர். அந்தம்மாவுக்கு உடம்பு நல்லபடி குண-

34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/37&oldid=1029181" இலிருந்து மீள்விக்கப்பட்டது