பக்கம்:ஆப்பிள் பசி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கும்போது நதிமூலம் ரிஷிமூலம் பாக்க வேண்டிய அவசியம் எதுக்குன்னு எனக்குப் புரியலை.”

“நான் இப்பவே அவனைப் போய்ப் பார்க்கட்டுமா?”

“வேணாம். ஒருதடவை நீங்க கோபப்பட்டு ஓட்டல்காரனோட மோதிப் பட்ட துன்பம் போதும். இனியும்.....”

“நான் கோபப்பட மாட்டேன். பாப்பா! நீ என்னை நம்பு. நியாயத்தைத்தான் எடுத்துச் சொல்வேன்.”

“வேண்டாங்க, அதெல்லாம் இப்ப அவர் காதிலே ஏறாது. அந்த ஓட்டல்காரன் பொய்யும் புளுகும் பேசி அவர் மனசைக் கலைச்சு விஷத்தைப் பாய்ச்சி வச்சிருக்கான். அதைக் கேட்டுக் கிட்டு அவர் ஆவேசம் வந்த மாதிரி குதிச்சு எவ்வளவு கேவலமாப் பேச முடியுமோ அவ்வளவும் பேசி என்னை வீட்டை விட்டே துரத்திட்டாரு, அப்புறம் என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு? அவரோடு இனி என்னால வாழ முடியாது.”

“அதனாலே இப்படியே வாழாவெட்டியாவே இருந்துடப் போறயா?”

'“வாழ்நாள் முழுக்க ஒருத்தி ஒருவனோடு வாழணுங்கறதெல்லாம் இப்ப இல்லே, காலம் மாறிப் போச்சு. ஒருவனைப் பிரிஞ்சப்புறம் இன்னொருவனுடன் வாழறதிலே தப்பில்லைன்னு ஆயிட்டது. ஒருவனை விடாம இன்னொருவனுடன் வாழறதுதான் தப்பு. ஒரு பெண் எப்போது என்னோட வாழறாளோ அப்போது அவனுக்கு துரோகம் செய்யாமலிருந்தாப் போதும். அதுதான் கற்புன்னு ஏதோ ஒரு புஸ்தகத்துலே படிச்சிருக்கேன். எனக்கு அந்தக் கருத்து புடிச்சிருக்கு, நான் அப்படித்தான் வாழப் போறேன்! அப்படி இன்னொருத்தனுடன் வாழறதுன்னு தீர்மர்னிச்சா அந்த இன்னொருத்தர் நீங்களாத்தான் இருப்பீங்க.”

சாமண்ணா சுவரோரம் நின்ற பழைய இரும்புப் பெட்டியைப் பார்த்தான், அதற்குமேல் சுவரில் மாட்டப்பட்டிருந்த அபரஞ்சி போட்டோவுக்கு மாலை போட்டு எதிரில் சின்ன குத்துவிளக்கு ஏற்றிவைத்திருந்தார்கள்.

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/42&oldid=1029348" இலிருந்து மீள்விக்கப்பட்டது