பக்கம்:ஆப்பிள் பசி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் நாட்டாமைக்காரர், கணக்குப் பிள்ளை, கிராம முனுசீப், தலையாரி, தெருக்கூத்து நடிகர் (அர்ஜுனன் வேஷக்காரர்) இப்படி நாலைந்து பேர் கும்பலாக வந்திருந்தார்கள்.

“அப்பா இருக்காரா? என நாட்டாமைக்காரர் கேட்க, “தோப்புக்குப் போயிருக்கார். வர நேரம்தான்” என்றாள் பாப்பா.

“இது யாரு இங்க சைக்கிள் விட்டிருக்காங்க?”

“டவுன்லருந்து வந்திருக்கார். டிராமாவில் நடிக்கிறாரே அவர்.”

“யாரு சாமண்ணாவா?”

“ஆமாம்... உங்களுக்குத் தெரியுமா அவரை?”

“அவரைத்தான் நாங்களும் பாக்கணும்னு பேசிக்கிட்டிருந்தோம். இந்த வருசம் விளாவில ஒருநாள் அவரை அளைச்சு வந்து கௌரவப்படுத்தணும்னு .....

சாமண்ணா வெளியே வந்தான்.

“கும்பிடறமுங்க, டவுன்ல உங்க நாடகம் அடிக்கடி பார்த்திருக்கம். 'மாடி மேல் மாடி'ன்னு பாடுவீங்களே......! இப்ப இங்க பாரதக் கூத்து நடக்குது. இன்னைக்கு அர்ச்சுனன் தவசுல இவர்தான் அர்ச்சுனன் வேசம் கட்டறாரு. நீங்க அவசியம் பாக்கணும். நாங்களே டவுனுக்கு வந்து உங்களை அளைக்கணும்னு நினைச்சுட்டிருந்தோம். தேடிப் போன மருந்து மாதிரி நீங்களே .......”

“உங்க கால்ல சிக்கிட்டனாக்கம்!” என்று சாமண்ணா சிரிக்க,

“அப்படிச் சொல்லக் கூடாதுங்க. நீங்க பெரிய நடிகருங்க....”

“கூத்துன்னா விடிய விடிய நடக்குமா?”

“ஆமாங்க. மத்தளம் தட்டி ரெண்டு மணி நேரத்துக்கப்புறம் நடுச்சாமத்துலேதான் அர்ச்சுன்ன் வருவார். நீங்களும் அந்த நேரத்துக்கு வந்தாப் போதுங்க. கொஞ்சம் முன்னாடி நாங்க தீவட்டியோடு இங்க வந்து உங்களைக் கூட்டிட்டுப் போறோம். நாற்காலி போட்டு வைக்கட்டுங்களா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணும். தரையில் உட்கார்ந்தே பாக்கறேன். தெருக்கூத்துன்னா அப்படித்தான் பார்க்கணும். அர்ஜுனன் கிரீடம் வச்சு புஜம் கட்டியிருப்பாரில்ல?”

“அப்படியேதாங்க.... கையில மரக்கத்தி புடிச்சி, ஒவ்வொரு பாட்டுக்கும் பாவாடை பறக்கச் சுத்திச் சுத்தி வருவாரு. தூள் பறக்கும்.”

“தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு. எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. ராத்திரி வந்துடறேன். குமாரசாமி வந்த ம் அவர்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க.”

“இதோ, அவரே வந்துட்டாரே!”

“என்ன கும்பலா எல்லாரும் இப்படி...?” என்று கேட்டுக் கொண்டே வந்த குமாரசாமி சாமண்ணாவைப் பார்த்துவிட்டு,

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/44&oldid=1029276" இலிருந்து மீள்விக்கப்பட்டது