பக்கம்:ஆப்பிள் பசி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“வாங்க தம்பி, நீங்க எப்ப வந்தீங்க?”

“இப்பத்தான், கொஞ்ச நேரமாச்சு. இன்னைக்கு ராத்திரி நான் கூத்து பாக்க வரணுமாம்...!”

“நீங்க ஒரு பெரிய நடிகர் இல்லையா? நீங்க வந்தால் அது இந்தக் கிராமத்துக்கே பெருமையாச்சே!”

ர்மராஜா கோயிலுக்கு முன்னால் அர்ஜுனன் தபசுக்காக, பனை மரம் வெட்டி வந்து, அதன் மீது பரண் கட்டியிருந்தார்கள். அர்ஜுனன் அந்தப் பரண் மீது அமர்ந்து தவம் செய்வான். மேலே ஏறும்போது ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டுப் பாடுவான். தவம் முடிவதற்குள்ளே ஏறத்தாழ பொழுதே. விடிந்து போகும்! அப்புறம்தான் அர்ஜுனன் கீழே இறங்கி வருவான்.

அன்று சாமண்ணா வந்திருக்கும் உற்சாகத்தில் கூத்து ரொம்ப நேரம் நீண்டுவிட்டது. கிழக்கு வெளுத்து சூரியன் தலைகாட்டுகிறபோதுதான் அர்ஜுனன் கீழே இறங்கி வந்தான். கிராம் மக்கள் சார்பில் சாமண்ணாவுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்திய அர்ஜூனன் நாலு வார்த்தை பேசும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க சாமண்ணா எழுந்து பேசினான்.

“பூவேலி கிராம மக்களே வணக்கம்! இங்கே இன்று மிகச் சிறப்பாக 'அர்ஜுனன் தபஸ்' நடத்திய தெருக்கூத்துக் கலைஞர்களைப் பாராட்டுவதில் பெருமைப்படுகிறேன். நடிகர்களைக் கூத்தாடி என்கிறார்கள். அது கேவலம் அல்ல. அம்பலத்தில் கூத்தாடுகிற நடராஜப் பெருமான் கூட ஒரு கூத்தாடிதான். சுமக்க முடியாத இவ்வளவு பெரிய பூ மாலையைப் போட்டு என்னைப் பூவேலிக்குள் அடைத்துவிட்டீர்கள். நீங்கள் உங்கள் அன்பினால் மட்டும் என்னைக் கட்டுப்படுத்தவில்லை.. இந்தப் பூவேலியாலும் கட்டுப்படுத்திவிட்டீர்கள்” என்று கூறிய போது கிராம் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். தன் பேச்சை பாப்பா ரசிக்கிறாளா என்று சாமண்ணா சாடையாகத் திரும்பிப் பார்த்தபோது அவளும் கைதட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“வண்டி கொண்டாந்திருக்கேன். வீட்டுக்குப் போவமா?” என்று சாமண்ணாவிடமிருந்த மாலையை வாங்கிக் கொண்டார் குமாரசாமி.

“கொஞ்ச தூரம்தானே? நடந்தே போயிடலாமே?”

“வேண்டாம் தம்பி! கூத்து பாத்தவங்க வழியெல்லாம் மூத்திரம் வழிய விட்டிருப்பாங்க. காலை வைக்க முடியாது” என்றான் குமாரசாமி.

சாமண்ணாவும் பாப்பாவும் வண்டியில் ஏறி அமர ஒரு சின்ன கும்பல் அவர்களை வழி அனுப்பி வைத்தது.

வண்டி வீட்டு வாசலில் போய் நின்றதும், “நான் இப்பவே

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/45&oldid=1029287" இலிருந்து மீள்விக்கப்பட்டது