பக்கம்:ஆப்பிள் பசி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புறப்பட்டலாம்னு பாக்கறேன். அப்பத்தான் வெயிலுக்கு முன்னால் டவுனுக்குப் போய்ச் சேரலாம்” என்றான் சாமண்ணா.

“என்ன அவசரம் தம்பி? ரெண்டு நாளைக்கு இங்கதான் தங்கிட்டுப் போறது . பாப்பா எல்லாத்தையும் விவரமா சொல்லிட்டுது. நடந்ததைப் பத்திக் கவலைப்படாதீங்க. இது உங்க சொந்த வீடு மாதிரி...”

“ரொம்ப சந்தோஷம். ஆனாலும் இப்ப நான் இங்கே தங்கறது அவ்வளவு சரியாயிருக்காது. கிராமத்துலே நாலு பேர் நாலு தினுசாப் பேசுவாங்க. அதுக்கெல்லாம் இடம் தரக் கூடாது பாருங்க. பாப்பாவுக்குக் கல்யாணமாயிட்டுதே! அவள் கணவன் அநியாயமா நடந்துகிட்டதையெல்லாம் பாப்பா சொன்னா......”

“டவுனுக்குப் போய் என்ன செய்யப் போறீங்க? எங்கே தங்கப் போறீங்க? அங்கதான் டிராமாவிலே சேர்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாமே?”

“ஆமாம். இருந்தாலும் இன்னொரு முறை கேட்டுப் பாக்கறேன். காண்ட்ராக்டருக்கு உள்ளூர என்னைச் சேத்துக்கணுங்கற எண்ணம்தான். ஆனா அந்த ஓட்டல்கார அயோக்கியன்தான் தடை போட்டு வெச்சிருக்கான். இருக்கட்டும். அவனை நான் சும்மா விடப்போறதில்லை. என்று பற்களை நறநறவென்று கடித்தான் சாமண்ணா.

“அவனை மறந்துடுங்க.தம்பி! எதுக்கு வீண் வம்பு? கொஞ்ச நாளைக்குப் பொறுமையா இருங்க. நீங்க இப்ப டவுனுக்குப் போறதில் பாப்பாவுக்குக் கொஞ்சம்கூட இஷ்டமில்லே.

“பாப்பா மனசிலே என்ன இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும். எனக்கு ஒரு லட்சியம் இருக்கு. அதுதான் இப்ப எனக்கு முக்கியம், மற்றதெல்லாம் அப்புறம்தான், என் மூச்சு பேச்சு எல்லாமே நாடகம்தான். என் நடிப்பைக் கண்டு இந்த நாடே வியக்கணும். என் கோமாளி வேஷத்தையும் நடிப்பையும் பார்த்து. எல்லாரும் சிரிக்கிறாங்க. ஆனா இதிலே எனக்கு திருப்தியேர் மகிழ்ச்சியோ இல்லை. நான் ஒரு ஹீரோவா. கதாநாயகனா மாறி என் நடிப்பாலே ஊரையே அழ வைக்கணுங்கறதுதான் என் ஆசை. அதை நடத்தியே தீருவேன். எனக்குள்ளே ஒரு பிசாசு இருக்கு.

‘சாமண்ணா! நீ ஒரு பிறவி நடிகன். உன் நடிப்பைக் கண்டு இந்த உலகமே பாராட்டப் போகுது. ம்... புறப்படு. உன் லட்சியப் பயணத்தை இப்பவே தொடங்கு’ என்று என்னை அது தூண்டிக்கிட்டே இருக்கு. உடம்பெல்லாம் எப்பவும் ஒரு ஆவேசம் வந்த மாதிரி இருக்கு” என்று கூறியவன் திரும்பி பாப்பாவைப் பார்த்து. “நான் வரட்டுமா?” என்று கேட்டான். பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு, “நீங்க

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/46&oldid=1029299" இலிருந்து மீள்விக்கப்பட்டது