பக்கம்:ஆப்பிள் பசி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போகத்தான் வேணுமா?” என்பதுபோல் கண்களால் கேட்டுக் கொண்டே ஒப்புக்குத் தலையசைத்தாள் பாப்பா.

“வெந்நீர் போட்டிருக்கு. குளிச்சு இட்லி சாப்பிட்டுப் போங்க. அப்பத்தான் கூத்துப் பாத்த மயக்கம் தெளியும்” என்றான் குமாரசாமி.

“இட்லி சாப்பிட்டப்புறம் ஒரு தூக்கம் போடச் சொல்லுங்க. தூங்கி எழுந்திருப்பதற்குள் மணி ஒண்ணரையாயிடும். அப்புறம் சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்வீங்க...” என்று சிரித்தான் சாமண்ணா.

“சாப்பாட்டுக்கு மேல்தான் புறப்படுங்களேன். வெயில் தாழ்ந்தாப்பல...” என்றாள் பாப்பா.

“ஆமாம். அதுக்குள்ளே ராகுகாலமும் போயிடும்!” என்றான் குமாரசாமி.

அவர்கள் பேச்சைத் தட்ட விருப்பமின்றி ஒரு தூக்கம் போட்டு சாப்பிட்ட பிறகே புறப்படத் தயாரானான். எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை அவனிடம் தந்த பாப்பா, “இதைக் கொஞ்சம் போஸ்ட் பண்ணிர முடியுமா?” என்று கேட்டாள்.

“லெட்டர் யாருக்கு?”

“விலாசம் கவர் மேலேயே எழுதியிருக்கேன்.”

அதை வாங்கிச் சட்டைப் பையில் திணித்துக் கொண்ட சாமண்ணா சைக்கிள் ஏறிச் சென்றபோது, தெருக்கோடி வரை அவனையே கண் கொட்டாமல் பார்த்து நின்றாள் பாப்பா.


சூரியகுளம் - நாடகக் கொட்டகை வெறிச்சோடிக் கிடந்தது. கொட்டகையில் யாரையுமே காணவில்லை.

எலெக்ட்ரீஷியன் சிட்டிபாபு மட்டும் மின்சார வயர் ஒன்றைப் பல்லால் கடித்து ஃப்யூஸ் போட்டுக் கொண்டிருந்தான். சாமண்ணாவைக் கண்டதும், “வாங்கய்யா” என்று ஜீவனில்லாமல் சொன்னான்.

“என்ன பாபு! இன்னைக்கு நாடகம் இல்லையா?”

“அர்த்தால் நடக்கப் போகுதாம். அந்நியத் துணிகளை நடுரோடில கொளுத்தப் போறாங்களாம். பெரிய கலாட்டா.வாயிருக்கும் போல இருக்கு. அதனால டிராமாவை நிறுத்தி வெச்சிருக்காங்க.”

“காண்ட்ராக்டரை எங்கே காணோம்?”

“இப்பத்தான் வீட்டுக்குப் போனார்.”

“காதர் பாட்சா?”

“அவன் லீவ்ல போயிட்டான்!”

“சரி; காண்ட்ராக்டர் வந்தா நான் அப்பறம் வந்து பாக்கறேன்னு சொல்லு.”

சாமண்ணா வெளியே வந்து கொஞ்ச தூரம் நடந்து அரைக் கதவாய்ச் சாத்தி வைத்திருந்த ‘அஞ்சு ராந்தல்’ தண்ணீர்ப்

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/49&oldid=1029313" இலிருந்து மீள்விக்கப்பட்டது