பக்கம்:ஆப்பிள் பசி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாசலில் ஓட்டல்காரர் மகள் லல்லு நின்று கொண்டிருந்தாள். ‘அச்சச்சோ’ போல, கையால் முகத்தை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தாள். பிறகு தாவணி தடுக்காமலிருக்க ‘ததக் பிதக்’ என்று காலை வைத்து உள்ளே வந்தாள்.

வக்கீல் மாமி கோமளத்திற்குக் கதி கலங்கிற்று. அவள் லல்லுவைப் பலமுறை பார்த்திருக்கிறாள். சும்மா இருந்தால் இருப்பாள். இல்லாவிட்டால் யாரையாவது ஒரு அடி அடிப்பாள். ஊர்ப் பசங்கள் அவளை ‘அடி’ லல்லு என்று கூப்பிட்டு அவளுடைய எலிவால் தலைமயிரைப் பிடித்து இழுப்பார்கள். லல்லு அவர்களை அடிப்பதற்குத் துரத்துவாள்.

“வா, லல்லு” என்று கோமளம் வாய் நிறையச் சிரித்து அழைத்தாள்.

உண்மையில் சிரிக்கவில்லை. பயத்தை மாற்றிக் கொண்டு சிரிப்பது போல் பாசாங்கு செய்தாள். “ரே, ரே, லல்லுவா?” என்றார் வரதாச்சாரி.

“மாமா! மாமா! சர்மண்ணாவை ஜெயில்லே போட்டிருக்காளாமே! உங்களுக்குத் தெரியுமா?” என்று சோகத்தோடு, கேட்டாள் லல்லு.

“தெரியாதேம்மா!”

“எங்க அப்பாவை அவர் கொன்னுட்டார்னு சொல்லி போலீஸ்ல அவரைப் பிடிச்சுண்டு போய் ஜெயில்லே வச்சிருக்காளாமே! எனக்கு அழுகையா வரது மாமா! நீங்க எனக்குக் கொஞ்சம் உதவி பண்ணுவேளா?”

"என்ன செய்யணும்?

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/58&oldid=1029470" இலிருந்து மீள்விக்கப்பட்டது