பக்கம்:ஆப்பிள் பசி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெஞ்சு ஓரத்தில் சொல்பமாக உட்கார்ந்தான், கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன. களைப்பாக இருந்தான்.

“ஸார்! நீங்க இப்படி ஒரு டிராமா நடிகன் மேல் பெரிய மனசு பண்ணி, விடுதலை வாங்கித் தந்தீங்களே, ஏழேழு ஜன்மத்துக்கும் கடமைப்பட்டிருக்கேன்.” என்று வரதாச்சாரி எதிர்பார்ப்பதற்கு முன் அவர் காலடியைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டு எழுந்தான்.

வேண்டாம் என்பது போலக் கால்களைத் தூக்கிக் கொண்டார் வரதாச்சாரி. “இதெல்லாம் எதுக்கு சாமண்ணா ? யாரோ பணம் கொடுத்தாங்க. நான் என் தொழிலைத்தான் செஞ்சேன். இதிலே வேறே ஒண்ணுமில்லை.”

இதற்குள் கோமளம் கூடத்திற்குள் வந்து சாமண்ணாவைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.

“வா! சர்மண்ணுதான்! வந்து பாரு” என்றார் வரதாச்சாரி.

கோமளத்தின் நினைவில் சர்மண்ணாவின் நாடகச் சேட்டைகள் எல்லாம் நிழலாட, பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஒதுக்கமாக நின்றாள்.

“நமஸ்காரம் மாமி என்று உள்ளே பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு, '“உங்காத்து மாமாதான் என்னைக் காப்பாத்தினார். ஜன்மத்துக்கும் மறக்க மாட்டேன். எனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை என்னால தாங்க முடியலை. நான் கொலைகாரன் இல்லைங்கறதை வக்கீல் ஸார்தான் வாதாடி நிரூபிக்கனும், அப்பதான் நான் நாலு பேருக்கு முன்னால .தலைநிமிர்ந்து நடமாட முடியும்” என்றான்.

“உங்க டிராமா நிறையப் பார்த்திருக்கேன். உங்க நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும், கடவுள் உங்களைக் காப்பாத்துவார், கவலைப்படாதீங்க” என்று சொன்ன கோமளம் உள்ளே போய் இரண்டு பேருக்குமாகக் காப்பி கலந்து கொண்டு வைத்தாள்.

சூடாக அதைச் சாப்பிட்ட பிறகுதான் வக்கீல் ஸார் புது மனிதர் போலப் பேசினார்.

குரலை வெகுவாகத் தணித்து, “ஏம்பா, உனக்கும் அந்தப் பாப்பாவுக்கும் ஏதாவது உறவு இருந்தா எங்கிட்ட கூச்சப் படாமல் சொல்லு” என்றார்.

சாமண்ண காலி டம்ளரைத் தள்ளி வைத்தான்.

“அப்படி எதுவுமில்லை ஸார்! அந்தப் பெண்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளணும்னு நினைக்கிறா!”

“நீ அப்படி நினைக்கலையாக்கும். அவ மட்டும்தான் உன் மேலே பிரேமை வச்சிருக்காளா? உனக்கு இஷ்டமில்லையா?”

“இஷ்டமில்லைன்னு சொல்ல மாட்டேன். நான் இன்னும் ஒரு முடிவுக்கு வரலை. அவள் என் நடிப்பிலே ஒரு ரசிப்பு

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/60&oldid=1029522" இலிருந்து மீள்விக்கப்பட்டது